Adikuthu Kuliru Song Lyrics in Tamil from Mannan Movie. Adikuthu Kuliru Song Lyrics are written in Tamil by Kavingar Vaali.
படத்தின் பெயர்: | மன்னன் |
---|---|
வருடம்: | 1992 |
பாடலின் பெயர்: | அடிக்குது குளிரு |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | ரஜினிகாந்த், எஸ்.ஜானகி |
பாடல் வரிகள்:
பெண்: அடிக்குது குளிரு
துடிக்குது தளிரு
அடிக்குது குளிரு
துடிக்குது தளிரு
பெண்: முல்லை பூங்கொடி
கொம்பை தேடுது
கொம்பை போல
உன் அன்பை தேடுது
பெண்: வா கட்டபொம்மன் பேரா
கட்டழகு வீரா
கிட்ட வந்து நேரா
கட்டிக்கொள்ளு ஜோரா
பெண்: அடிக்குது குளிரு
ஆண்: அது சரி அது சரி
பெண்: துடிக்குது தளிரு
ஆண்: இத பார்ரா
பெண்: முல்லை பூங்கொடி
கொம்பை தேடுது
ஆண்: அப்டியா
கொம்பை போல
உன் அன்பை தேடுது
ஆண்: ஓஹோ
பெண்: வா கட்டபொம்மன் பேரா
கட்டழகு வீரா
ஆண்: எப்டி எப்டி
கிட்ட வந்து நேரா
கட்டிக்கொள்ளு ஜோரா
பெண்: அள்ளி சேர்க்க
ஆசை இல்லையோ
ஆடி ரதம் அழைக்குது
ஆண்: ஐய்
பெண்: கிள்ளி பார்க்க
எண்ணமில்லையோ
ஆலிலை தவிக்குது
ஆண்: ஓஹோ
பெண்: முத்தம் நூறு
கேட்டு வாங்கவே
நாணமெனை தடுக்குது
ஆண்: அட்ர்ரா சக்கை
பெண்: பித்தம் ஏறி
தூண்டில் மீனென
நூலிடை துடிக்குது
ஆண்: இதெப்டி இருக்கு
பெண்: சுகமான கட்டில் நாடகம்
ஆண்: நீயும் நானும் ஆடலாம்
ம் ஹான்
பெண்: வெள்ளி வானில்
தோன்றும் மட்டிலும்
வெட்கம் இன்றி கூடலாம்
ஆண்: அப்டி போடு
பெண்: உன்னை பார்த்து நான்
சொக்கி போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா
கட்டி கொள்ளு ஜோரா
பெண்: அடிக்குது குளிரு
ஆண்: அது சரி அது சரி
பெண்: துடிக்குது தளிரு
ஆண்: அது ரொம்ப சரி
ரொம்ப சரி
ஆண்: சொன்னால் போதும்
நூறு மாப்பிள்ளை
பெண்: மாலையிட கிடைக்கலாம்
ஆண்: இங்கே வந்து
காலை மாலை தான்
பெண்: சேலையை துவைக்கலாம்
ஆண்: என்னை போல
ஒரு நல்ல மாப்பிள்ளை
பெண்: வாய்ப்பதொரு அதிசயம்
ஆண்: என்னை நீயும்
ஏற்றுக் கொண்டது
பெண்: பாவையென் பாக்கியம்
பெண்: நெடு நாட்கள்
ஏங்கும் ஏக்கம் தான்
இந்நாள் இங்கு தீர்ந்தது
ஆண்: இல்லைய பின்ன
பெண்: மங்கை செய்த
பூர்வ புண்ணியம்
மன்னன் வந்து சேர்ந்தது
ஆண்: போச்சுடா
பெண்: உன்னை பார்த்து நான்
சொக்கி போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா
கட்டி கொள்ளு ஜோரா
ஆண்: அடிக்குது குளிரு
என்னை மடக்குது தளிரு
முல்லை பூங்கொடி
கொம்பை தேடுது
ஆண்: கொம்பை போல என்
அன்பை தேடுது
வாரே வாரே வா
ஆண்: கட்டி தங்க மேனி
கட்டழகு ராணி
கொட்டி பார்த்த தேனி
கட்டில் பக்கம் வா நீ
அடிக்குது குளிரு