Vaadi Vethala Pakku Song Lyrics in Tamil

Vaadi Vethala Pakku Song Lyrics in Tamil from Veera Movie. Vaadi Vethala Pakku Song Lyrics are penned in Tamil by Kavingar Vaali.

படத்தின் பெயர்:வீரா
வருடம்:1994
பாடலின் பெயர்:வாடி வெத்தல பாக்கு
இசையமைப்பாளர்:இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:மனோ, கே.எஸ்.சித்ரா

பாடல் வரிகள்:

ஆண்: வாடி வெத்தல பாக்கு
வாங்கித்தாரேன் நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

பெண்: வாய்யா வெத்தல பாக்கு
வாங்கித்தாரேன் நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

ஆண்: முந்திபோட்டு கொஞ்சுறபோது
பந்தி ஒண்ணு வைக்க வேணும்
பெண்: அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
சுந்தரிக்கு முந்திரிப் பந்தல்

ஆண்: எடம் பாத்து அடிச்சா கண்ணு
தக்கிட தகதிமி தகஜுனுதோம்

பெண்: வாய்யா வெத்தல பாக்கு
வாங்கித்தாரேன் நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

பெண்: விடவே மாட்டேன் வா மாமா
ஆண்: வரலாமா வரலாமா வரலாமா
பெண்: அது தான் கேட்டேன் தா மாமா
ஆண்:தரலாமா தரலாமா தரலாமா

பெண்: ஓஹோ ஹோ
விடவே மாட்டேன் வா மாமா
அதுதான் கேட்டேன் தா மாமா

பெண்: நடுச்சாமம் ஆனாக்க
தூக்கமில்லை
ஆண் : ஹா ஹோ ஆஹா

பெண்: நடுச்சாமம் ஆனாக்க
தூக்கமில்லை
அட நீயுந்தான் ஏனின்னு
கேக்கவில்லை

ஆண்: ஊத காத்து பட்டாலே
பெண்: ஹா கொதிக்காதா
கொதிக்காதா கொதிக்காதா
ஆண்: மாமன்காரன் தொட்டாலே
பெண்: ஹும் குளிராதா
குளிராதா குளிராதா

ஆண்: ஓ ஓ ஓ
ஊத காத்து பட்டாலே
மாமன்காரன் தொட்டாலே

ஆண்: கொதிப்பேறிச் சூடேறும்
மெல்ல மெல்ல
பெண்: ஹா ஹோ ஹா

ஆண்: கொதிப்பேறிச் சூடேறும்
மெல்ல மெல்ல
மனம் குஷி ஏறி கூத்தாடும்
சொல்லச் சொல்ல

பெண்: எடம் பாத்து அடிச்சா கண்ணு
தக்கிட தகதிமி தகஜுனுதோம்

ஆண்: வாடி வெத்தல பாக்கு
வாங்கித்தாரேன் நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

ஆண்: புதுசா சுட்ட பணியாரம்
பெண்: ஹா எடுத்துக்கோ
எடுத்துக்கோ எடுத்துக்கோ
ஆண்: கடிச்சா கொஞ்சம் பசியாறும்
பெண்: ஹா கடிச்சுக்கோ
கடிச்சுக்கோ கடிச்சுக்கோ

ஆண்: ஓ ஓ ஓ
புதுசா சுட்ட பணியாரம்
கடிச்சா கொஞ்சம் பசியாறும்

ஆண்: சுட சுட இப்பவே தந்திடணும்
பெண்: ஹா ஹோ ஹா
ஆண்: சுட சுட இப்பவே தந்திடணும்
கை பட பட பக்கத்தில் வந்திடணும்

பெண்: வெடலப் பொண்ண கண் வச்சு
ஆண்: ஹா வளைக்கட்டா
வளைக்கட்டா வளைக்கட்டா
பெண்: உரசி கொஞ்சம் கை வச்சு
ஆண்: ஆஹா புடிக்கட்டா
புடிக்கட்டா புடிக்கட்டா

பெண்: ஓஹோ ஹோ
வெடலப் பொண்ண கண் வச்சு
உரசி கொஞ்சம் கை வச்சு

பெண்: வலிக்காம தேனள்ளி
குடிச்சுக்கைய்யா
ஆண்: ஹா ஹோ ஹா

பெண்: வலிக்காம தேனள்ளி
குடிச்சுக்கைய்யா
மிச்ச விஷயத்த ஒழுங்காக
முடிச்சுக்கைய்யா

ஆண்: எடம் பாத்து அடிச்சா கண்ணு
தக்கிட தகதிமி தகஜுனுதோம்

பெண்: வாய்யா வெத்தல பாக்கு
வாங்கித்தாரேன் நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

ஆண்: ஓ முந்திபோட்டு கொஞ்சுறபோது
பந்தி ஒண்ணு வைக்க வேணும்
பெண் : அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
சுந்தரிக்கு முந்திரிப் பந்தல்

ஆண்: எடம் பாத்து அடிச்சா கண்ணு
தக்கிட தகதிமி தகஜுனுதோம்

ஆண்: வாடி வெத்தல பாக்கு
வாங்கித்தாரேன் நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *