Raa Kozhi Rendu Song Lyrics in Tamil from Uzhavan Movie. Raa Kozhi Rendu Song Lyrics are penned in Tamil by Kavingar Vaali.
படத்தின் பெயர்: | உழவன் |
---|---|
வருடம்: | 1993 |
பாடலின் பெயர்: | ராக்கோழி ரெண்டும் |
இசையமைப்பாளர்: | AR ரஹ்மான் |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | KJ யேசுதாஸ், ஸ்வர்ணலதா |
பாடல் வரிகள்:
ஆண்: கோழி ரெண்டு முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
பெண்: உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க
ஆண்: கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க
பெண்: ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
பெண்: உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க
ஆண்: கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க
ஆண்: ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
பெண்: ஒரு நாள் பார்க்குமா
புது நாத்தோடு தேனு
தென்காற்று தெம்மாங்கு பாட
ஆண்: இன்னும் நாளாகுமா
சின்ன ஆவாரம்பூ தேன்
வேண்டும் வண்டோடு கூட
பெண்: இன்ப வாழ்வானது
இங்கு வீணாகுது
பின்பு வாராது இள வயது
பெண்:மெல்ல சீராட்டவும்
அள்ளித் தாலாட்டவும்
இது தோதான ஏகாந்த இரவு
ஆண்: ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
பெண்: உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க
ஆண்: ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
பெண்: கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க
ஆண்: ஒரு மாந்தோப்புத்தான்
சிறு மாராப்பு போட்டு
ஆளாகி நாளாகி ஏங்க
பெண்: ஒரு மாமாங்கமா
சின்ன மாமாவைத் தேடி
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க
ஆண்: அந்த மேகங்களும்
கொண்ட தாகங்களும்
இன்று தீர்கின்ற பொழுதல்லவா
ஆண்: கட்டிக் கொண்டால் என்ன
ஒட்டி நின்றால் என்ன
இதில் பாவங்கள் தோஷங்கள் ஏது
பெண்: ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
ஆண்: உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க
இருவரும்: கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க
ஆண்: ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
இருவரும்: ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு