Ye Miniki Song Lyrics in Tamil

Ye Miniki Song Lyrics from Asuran Tamil Movie. Ye Miniki Song Lyrics has penned in Tamil Eknath. Oththa Nilava Pola Song Lyrics

படத்தின் பெயர்:அசுரன்
வருடம்:2019
பாடலின் பெயர்:ஒத்த நிலவை போல
இசையமைப்பாளர்:GV பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்:ஏக்நாத்
பாடகர்கள்:டீஜே அருணாச்சலம்,
சின்மயீ

பாடல் வரிகள்:

ஆண்: ஒத்த நிலவை போல
குத்த வச்ச அழகுதாம்ல
எனை பிச்சி திங்கிதாம்ல
எம் மினுக்கிக் காத்திருக்கா
எனை உலுக்கிப் பூத்திருக்கா

ஆண்: நெத்தி வகுடுக்குள்ள
ஆம்பளைய சாச்சிருக்கா
ஆறப்போட்டு வச்சிருக்கா
எம் மினுக்கிக் காத்திருக்கா
எனை உலுக்கிப் பூத்திருக்கா

பெண்: சுத்தி வரும் பூமிக்குள்ள
என்னை சுத்தும் சாமி புள்ள
முந்தியில முடிச்சிவைக்க
உம்ம மினுக்கிக் காத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

பெண்: கம்மங் கூழைப் போல
கருவாட்டு துண்டப் போல
சொல்லாம முழுங்கத்தாம்மயா
உம்ம மினுக்கிக் காத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

பெண்: கோழி கூட்டுக்குள்ள
எதுக்கு புல்லு வைக்கேன் நான்
மாட்டு தொழுவுல
எதுக்கு முட்டை தேடுதேன்

பெண்: நானும் கோட்டி ஆயிட்டேனே
அட இது எதனால
தலை முட்டி ஒட வைக்காம்
இது அந்த எழவல

ஆண்: குவிச்சு வச்ச நெல்ல போல்
கூர்பாயும் நெஞ்சால
எனை குத்தி கொல்லதாம்ல
எம் மினுக்கிக் காத்திருக்கா
எனை உலுக்கிப் பூத்திருக்கா
எனை உலுக்கிப் பூத்திருக்கா

ஆண்: நண்டு பாதையில
நானும் வண்டியோட்டுதேன்
வண்டு போச்சுன்னா
அதுட்ட நின்னு பேசுதேன்

ஆண்: பனை மேல கலையாம
நான் தொங்கி நிக்கேனே
பறைக்குள்ள இசை போல
நான் ஒளிஞ்சிருக்கேம்ல

பெண்: அவன் முன்ன வந்துட்டா
அசங்காம கொன்னுட்டா
வலிக்காம வதைக்கதாம்யா
உம்ம மினுக்கிக் காத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

ஆண்: ஒத்த நிலவை போல
குத்த வச்ச அழகுதாம்ல
எனை பிச்சி திங்கிதாம்ல
எம் மினுக்கிக் காத்திருக்கா
எனை உலுக்கிப் பூத்திருக்கா

ஆண்: நெத்தி வகுடுக்குள்ள
ஆம்பளைய சாச்சிருக்கா
ஆறப்போட்டு வச்சிருக்கா
எம் மினுக்கிக் காத்திருக்கா
எனை உலுக்கிப் பூத்திருக்கா

பெண்: சுத்தி வரும் பூமிக்குள்ள
என்னை சுத்தும் சாமி புள்ள
முந்தியில முடிச்சிவைக்க
உம்ம மினுக்கிக் காத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

பெண்: கம்மங் கூழைப் போல
கருவாட்டு துண்டப் போல
சொல்லாம முழுங்கத்தாம்மயா
உம்ம மினுக்கிக் காத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா