Yaar Intha Oviyathai Song Lyrics in Tamil from Kalathil Santhipom Movie. Yaar Intha Oviyathai Song Lyrics has written in Tamil by Pa.Vijay.
படத்தின் பெயர்: | களத்தில் சந்திப்போம் |
---|---|
வருடம்: | 2020 |
பாடலின் பெயர்: | யார் அந்த ஓவியத்தை |
இசையமைப்பாளர்: | யுவன் சங்கர் ராஜா |
பாடலாசிரியர்: | பா.விஜய் |
பாடகர்கள்: | விஜய் யேசுதாஸ், நிவாஸ் |
பாடல் வரிகள்:
ஆண்1: யார் அந்த ஓவியத்தை
நடமாட வைத்ததோ
உன் வீட்டில் மாட்டி வைக்க
காலம் நேரம் வந்ததோ
ஆண்1: கண்ணாடி மாளிகையை
கண் வைத்து பார்த்ததோ
முன்னே அவள் நின்ற போது
கண்கள் கூசி போனதோ
ஆண்1: உலக அழகி இல்ல
உலவும் நிலவும் இல்ல
பழக தோழியா தெரியிறா
அதிர சிரிப்பும் இல்ல
அதிக சிவப்பும் இல்ல
அழகின் ஓவியமா அசத்துறா
ஆண்1: கவிதை போல வந்து
கனவு போல வந்து
உனக்கு அப்படியே பொருந்துறா
உனக்குன்னு இருக்குறா
உள்ளூர் எல்லோரா
ஆண்1: அவதான் உன் மாமன் பொண்ணு
அயிலே மீன் கண்ணே கண்ணு
உனக்கான ஜோடியினு
நான் பாத்து அசந்த பொண்ணு
ஆண்1: என்னனு நான் சொல்ல
அழகுன்னு அத்தனை அழகு
அன்றாடம் நீ மெல்ல
I Love You சொல்லி பழகு
ஆண்2: நான் பார்த்த தேவதைக்கு
சிறகில்லை உண்மையில்
அவள் போல பெண்ணை நானும்
பார்த்ததில்லை அண்மையில்
ஆண்2: தரைமேல நின்றபோதும்
மிதக்கின்றாள் மென்மையில்
தங்கத்தை ஊற்றி ஊற்றி
வார்த்து வைத்த பொன்மயில்
ஆண்2: லட்சம் பூ பறிச்சு
மிச்சம் தேன் தெளிச்சு
வச்ச அழகு அவ அழகுடா
அச்ச பார்வையில
உச்சம் கவிதை ஒன்னு
அச்சில் எட்டிவிடும் அடடடா
ஆண்2: கச்ச தீவுக்கொரு
மச்சம் வச்சதுபோல்
பச்ச பசுமை அவ பாரடா
அழகடா அவளடா
அசந்து போலாம்டா
ஆண்2: அவள் கண்கள் கவிதை பக்கம்
அதில் கண்டேன் வெள்ளை வெக்கம்
அவள் வந்து முன்னே நின்றால்
நிலவெல்லாம் பின்னே நிற்கும்
ஆண்2: மொத்தத்தில் அவள் போல
பெண் இந்த ஊருக்குள் இல்ல
பக்கத்தில் அவள் வந்தால்
பறந்திடுவாய் வானில் மெல்ல
ஆண்1: கண்ணாடி சிலைய போல
முன்னாடி சிரிச்சு போறா
ஆத்தாடி உன் மனச
அங்காடி ஆக்கப்போறா
ஆண்2: மொத்தத்தில் அவள் போல
பெண் இந்த ஊருக்குள் இல்ல
பக்கத்தில் அவள் வந்தால்
பறந்திடுவாய் வானில் மெல்ல