Lollipop or Ennavale Ennavale Song Lyrics in Tamil

Lollipop or Ennavale Ennavale Song Lyrics in Tamil from Ninaithen Vandhai. Ennavale Ennavale or Lollipop Song Lyrics penned by Palani Bharathi

படத்தின் பெயர்:நினைத்தேன் வந்தாய்
வருடம்:1998
பாடலின் பெயர்:லாலி பப்பு லாலி பப்பு
இசையமைப்பாளர்:தேவா
பாடலாசிரியர்:பழனி பாரதி
பாடகர்கள்:மனோ, அனுராதா ஸ்ரீராம்

பாடல் வரிகள்:

பெண்: லாலி பப்பு லாலி பப்பு
போல் இனிக்கும் மனசு
ஜாலி டைப்பு பாட்டு கேட்டா
ஆடுகின்ற வயசு

ஆண்: என்னவளே என்னவளே
எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே
காக்க வைத்தாய் நீதான்

ஆண்: என்னவளே என்னவளே
எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே
காக்க வைத்தாய் நீதான்

ஆண்: என் கண்கள் தேடிடும்
காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும்
தாகம் நீதான்

ஆண்: என்னவளே என்னவளே
எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே
காக்க வைத்தாய் நீதான்

ஆண்: உயிாில் பூப்பறித்த
காதலியும் நீதான்
உள்ளம் தேடும் ஒரு
தேவதையும் நீதான்

பெண்: இரவில் மிதந்து வரும்
மெல்லிசையும் நீதான்
இளமை நனையவரும்
பூமழையும் நீதான்

ஆண்: வோ்க்க வைத்தாய் நீதான் நீதான்
விசிறி விட்டாய் நீதான் நீதான்
பெண்: தேடி வந்தாய் நீதான் நீதான்
தேட வைத்தாய் நீதான் நீதான்

ஆண்: புதையலைப் போல வந்து
கிடைத்தவளும் நீதான்
பெண்: தொியாமல் என் மனதைப்
பறித்ததும் நீதான்

ஆண்: என்னவளே என்னவளே
எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே
காக்க வைத்தாய் நீதான்

ஆண்: என்னை மூடிவிடும்
வெண்பனியும் நீதான்
குளிரும் மாா்கழியில்
கம்பளியும் நீதான்

பெண்: என்னைத் உறங்க வைக்கும்
தலையணையும் நீதான்
தூக்கம் கலைத்து விடும்
கனவுகளும் நீதான்

ஆண்: மோகங்களும் நீதான் நீதான்
முத்தங்களும் நீதான் நீதான்
பெண்: புன்னகையும் நீதான் நீதான்
கண்ணீரும் நீதான் நீதான்

ஆண்: கண்களை மூடிவிட்டு
ஒளிந்தவளும் நீதான்
பெண்: ஒளிந்தவளை அருகில்
வந்து அனைத்ததும் நீதான்

ஆண்: என்னவளே என்னவளே
எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே
காக்க வைத்தாய் நீதான்

ஆண்: என்னவளே என்னவளே
எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே
காக்க வைத்தாய் நீதான்

ஆண்: என் கண்கள் தேடிடும்
காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும்
தாகம் நீதான்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *