Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Vilambara Idaiveli Song Lyrics in Tamil from Imaikkaa Nodigal Movie. Vilambara Idaiveli Song Lyrics penned in Tamil by Kabilan Vairamuthu.

படத்தின் பெயர்இமைக்கா நொடிகள்
வருடம்2018
பாடலின் பெயர்விளம்பர இடைவெளி
இசையமைப்பாளர்ஹிப் ஹாப் தமிழா
பாடலாசிரியர்கபிலன் வைரமுத்து
பாடகர்கள்கிறிஸ்டோபர் ஸ்டேன்லி, சுதர்ஷன் அசோக்,
ஹிப் ஹாப் தமிழா, ஸ்ரீநிஷா ஜெயசீலன்
பாடல் வரிகள்:

ஆண்: ஒளி இல்லா உன் மொழிகள்
விடை தேடும் என் விழிகள்
இமைக்காத நம் நொடிகள்
கடிகார தேன் துளிகள்

அடி வாராரா உன் காதல் நீ சொல்லடி
வாராத நடிப்பெல்லாம் வேண்டாமடி
மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி
கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி

விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்

நான் உனதே அடி நீ எனதா
தெரியாமல் நானும் தேய்கிறேன்
இல்லை என்றே சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்

பெண்: காதல் பூவை நான் ஏற்று கொண்டால்
உன் காத்திருப்பு நிறைவாகுமே
காத்திருப்பு அது தீர்ந்து விட்டால்
நம் கால் தடங்கள் அவை திசை மாறுமே

இவளின் கனவோ உள்ளே ஒளியும்
இரவும் பகலும் இதயம் வழியும்
வழியும் கனவு இதழை அடையும்
எந்த காட்சியில் அது வார்த்தை ஆகிடும்

ஆண்: விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்

பெண்: நிலமெல்லாம் உன் தடமே
நிலவெல்லாம் உன் படமே
நிஜமெல்லாம் உன் நிறமே
நினைவெல்லாம் உன் நியாமே ஹே

மதுரம் கொஞ்சும் இளைஞன் நீயோ
மதமே இல்லா இறைவன் நீயோ
வயத்தை கடிக்கும் குழந்தை நீயோ
வரம்பு மீறலோ எனை தொடரும் தூறலோ

ஆண்: நான் உனதே அடி நீ எனதா
தெரியாமல் நானும் தேய்கிறேன்
இல்லை என்றேசொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்

நான் உனதே அடி நீ எனதா
தெரியாமல் நானும் தேய்கிறேன்
இல்லை என்றேசொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்

பாடலின் விவரங்கள்:

விளம்பர இடைவெளி என்னும் பாடலானது இமைக்கா நொடிகள் என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தில் அதர்வா, நயன்தாரா, விஜய் சேதுபதி, ராசி கண்ணா, அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்பாடலின் வரிகளை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.

இந்த பாடலை ஹிப் ஹாப் ஆதி, கிறிஸ்டோபர் ஸ்டேன்லி, சுதர்ஷன் அசோக், ஸ்ரீநிஷா ஜெயசீலன் முதலானோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலானது 2018-ம் ஆண்டு திங்க் மியூசிக் இந்தியா என்ற யூடுப் சேனலில் வெளியிடப்பட்டது. மேலும் விவரங்களுக்கு இங்கே தொடவும்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.