Iravingu Theevai Song Lyrics in Tamil from 96 Movie. Iravingu Theevai Song Lyrics penned in Tamil by Uma Devi. 96 Iravingu Theevai Lyrics.
படத்தின் பெயர் | 96 |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | இரவிங்கு தீவாய் |
இசையமைப்பாளர் | கோவிந்த் வசந்தா |
பாடலாசிரியர் | உமாதேவி |
பாடகர்கள் | சின்மயி, பிரதீப் குமார் |
பாடல் வரிகள்:
பெண்: இரவிங்கு தீவாய் நமை சூழுதே
விடியலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய் அலை மோதுதே
உடலிங்கு சாவாய் அழுதே
ஆண்: பிரிவே உருவாய் கரைந்து போகிறேன்
உயிரின் உயிராய் பிரிந்து போகிறேன்
மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்
வறண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்
கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்
ஆண்: இரவிங்கு தீவாய் நமை சூழுதே
விடியலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய் அலை மோதுதே
உடலிங்கு சாவை அழுதே
பெண்: இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே
அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயுதே
ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே
அட காலங்கள் தடை மீறி நடை போடுதே
பெண்: நீ இன்றி நானே
தினம் வாழ்வதொரு வாழ்வா
வாழ்வே வா நீ தான்
உயிரின் உயிரே வரவா… வரவா…
ஆண்: தினம் தினம் உயிர் தெழும்
மனம் அன்றாடம் மாயுமே
உயிர் வரை நிறைந்து துணை
மனம் கொண்டாடி வாழுமே
ஆண்: மரங்கள் சாய்ந்து கூடு வீழ்ந்து
குயில்கள் ராகம் பாடுமே
இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்
நிலவு பொறுமை காக்குமே
ஆண்: மழை வழி கடல் விடும்
விண் காதல் மண்ணை சேருமே
உனை உடல் பிரிந்தினும்
என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே
நீ போய் வா வா வா…
பாடலின் விவரங்கள்:
இரவிங்கு தீவாய் என்னும் பாடலானது 96 என்கிற திரைப்படத்தினுள் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலானது 2018-ம் ஆண்டு திங்க் மியூசிக் என்னும் யூடுப் சேனலில் வெளியிடப்பட்டது. இந்த பாடல் கதாநாயகன் கதாநாயகி இருவருக்கும் இடையிலான நீண்ட நாள் காதலின் வலியினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த பாடலுக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த பாடலினை பிரதீப் குமார் மற்றும் சின்மயி இணைந்து பாடியுள்ளார். இதன் வரிகளை உமா தேவி இயற்றியுள்ளார்.
படத்தின் விவரங்கள்:
96 என்கிற படத்தினை பிரேம் குமார் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி ராம் என்ற கதாபாத்திரத்திலும், திரிஷா கிருஷ்னன் ஜானு என்ற கதாபாத்திரத்திலும், ஆதித்யா பாஸ்கர் இளமையான ராம் கதாபாத்திரத்திலும், கௌரி கிஷான் இளமையான ஜானு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தில் பாடகி சின்மயி நடிகை ஜானு என்னும் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார்.
இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகன் கதாநாயகி இருவரும் 22 வருடங்களுக்கு பிறகு சந்தித்து தமது காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதுவரை தமிழ் திரையுலகில் வெளியிடப்பட்ட காதல் திரைப்படங்களில் இது அழிக்க முடியாத இடத்தை பெற்றுள்ளது. மேலும் விவரங்களுக்கு இங்கே தொடவும்.