Thabangale Song Lyrics in Tamil Font

Thabangale Song Lyrics in Tamil from 96 Movie. Thabangale Song Lyrics has written in Tamil by Uma Devi. 96 Thaabangale Lyrics.

படத்தின் பெயர்96
வருடம்2018
பாடலின் பெயர்தாபங்களே
இசையமைப்பாளர்கோவிந்த் வசந்தா
பாடலாசிரியர்உமா தேவி
பாடகர்கள்சின்மயி, பிரதீப் குமார்
பாடல் வரிகள்:

பெண்: தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே

தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே

ஆண்: தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே

தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே

இருவரும்: காலம் இரவின் புரவி ஆகாதோ
அதே கனா அதே வினா
வானம் நழுவி தழுவி ஆடாதா
அதே நிலா அருகினில் வருதே

பெண்: தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே

ஆண்: நான் நனைந்திடும் தீயாய்
பெய்யும் நிலா நீயா
நான் அணைந்திடுவேனா
ஆலாபனை தானா

இருவரும்: காதல் கானாக்கள் தானா
தீர உலா நானா போதாதா
காலம் வினாக்கள் தானா
போதும்…
அருகினில் வர மனம்
உருகிதான் கறையுதே

ஆண்: தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே

பெண்: தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே

பாடலின் விவரங்கள்:

தாபங்கள் என்னும் பாடலானது 96 என்னும் தமிழ் திரைப்படத்தினுள் இடம்பெற்றுள்ளது. இந்தப்பாடலின் வரிகளை உமா தேவி இயற்றியுள்ளார். இதற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சின்மயி மற்றும் பிரதீப் குமார் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலானது திங்க் மியூசிக் இந்தியா என்னும் யூடுப் சேனலில் 2018ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

படத்தின் விவரங்கள்:

96 என்கிற படத்தினை பிரேம் குமார் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி ராம் என்ற கதாபாத்திரத்திலும், திரிஷா கிருஷ்னன் ஜானு என்ற கதாபாத்திரத்திலும், ஆதித்யா பாஸ்கர் இளமையான ராம் கதாபாத்திரத்திலும், கௌரி கிஷான் இளமையான ஜானு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தில் பாடகி சின்மயி நடிகை ஜானு என்னும் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார்.

இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகன் கதாநாயகி இருவரும் 22 வருடங்களுக்கு பிறகு சந்தித்து தமது காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு இங்கே தொடவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *