Anthaathi Song Lyrics in Tamil Font

Anthathi Song Lyrics in Tamil from 96 Movie. Anthathi Song Lyrics has written in Tamil by Karthik Netha. 96 Anthaathi Lyrics.

படத்தின் பெயர்96
வருடம்2018
பாடலின் பெயர்அந்தாதி
இசையமைப்பாளர்கோவிந்த் வசந்தா
பாடலாசிரியர்கார்த்திக் நேத்தா
பாடகர்கள்சின்மயி, கோவிந்த் வசந்தா,
பத்ரா ராஜின், நாசர்
பாடல் வரிகள்:

பெண்: பேரன்பே காதல்

ஆண்: உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்
சதா…
ஆறாத ஆவல்

பெண்: ஏதேதோ சாயல் ஏற்று
திரியும் காதல்

ஆண்: பிரத்யேக தேடல்

பெண்: தீயில் தீராத காற்றில்
புல் பூண்டில் புழுவில்
உளதில் இளதில்

ஆண்: தானே எல்லாமும் ஆகி
நாம் காணும் அருவமே

இருவரும்: இத்யாதி காதல்
இல்லாத போதும்
தேடும் தேடல்
சதா…
மாறாது காதல்
மன்றாடும் போதும்
மாற்று கருத்தில் மோதும்
மாளாது ஊடல்

குழு: ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண்: நாம் இந்த தீயில்
வீடு கட்டும் தீக்குச்சி
நாம் இந்த காற்றில்
ஊஞ்சல் கட்டும் தூசி

நாம் இந்த நீரில்
வாழ்க்கை ஊட்டும் நீர் பூச்சி
நாம் இந்த காம்பில்
காமத்தின் ருசி

இருவரும்: காதல் கண்ணீரில் சிலந்தி
காதல் விண்மீனின் மெகந்தி
காதல் மெய்யான வதந்தி
காலம் தோறும் தொடரும் டைரி

காதல் தெய்வீக எதிரி
காதல் சாத்தானின் விசிறி
காதல் ஆன்மாவின் புலரி
வாழ்ந்து பெற்ற டிகிரி

குழு: ஓர்… விடைக்குள்ளே…
வினாவெல்லாம்… பதுங்குதே…
ஆ…
நாம்… கரைந்ததே…
மறைந்ததே… முடிந்ததே…
ஆ…

பெண்:ஆ… ஆ… ஆ…
கொஞ்சும் பூரணமே வா
நீ… கொஞ்சும் எழிலிசையே
பஞ்ச வர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம்… காதலடி…

குழு: காதலே காதலே
தனி பெருந்துணையே
கூட வா கூட வா
போதும் போதும்

காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போக வா
நீ…

குழு: ஆ…
திகம்பரி…
வலம்புரி…
சுயம்பு நீ…
நீ…

ஆ…
பிரகாரம் நீ…
பிரபாபம் நீ…
பிரவாகம் நீ…
நீ…

ஆ ஆ…
சிருங்காரம் நீ…
ஆங்காரம் நீ…
ஓங்காரம் நீ…
நீ…

நீ…
அந்தாதி நீ…
அந்தாதி நீ…
அந்தாதி நீ…
நீ…

ஆண்: ம்ம்…
தேட வேண்டாம்
முன் அறிவிப் பின்றி வரும்
அதன் வருகையை
இதயம் உரக்க சொல்லும்

காதல்…
காதல் ஒரு நாள் உங்களையும்
வந்து அடையும்
அதை அள்ளி அணைத்துக் கொள்ளுங்கள்
அன்பாக பார்த்துக் கொள்ளுங்கள்
காதல் தங்கும்
காதல் தயங்கும்
காதல் சிரிக்கும்
காதல் இனிக்கும்

காதல் கவிதைகள் வரையும்
காதல் கலங்கும்
காதல் குழம்பும்
காதல் ஓரளவுக்கு புரியும்
காதல் விலகும்
காதல் பிரியும்

கதவுகளை மூடாமல்
வழி அனுப்புங்கள்
காத்திருங்கள்
ஒரு வேலை காதல் திரும்பினாள்
தூரத்தில் தயங்கி நின்றால்
அருகில் செல்லுங்கள்
அன்புடன் பேசுங்கள்

போதும்…
காதல் உங்கள் வசம்
உள்ளம் காதல் வசம்
மாற்றங்கள் வினா
மாற்றங்களே விடை
காதல்…

பாடலின் விவரங்கள்:

அந்தாதி என்னும் படலானது 96 என்கிற தமிழ் படத்தினுள் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்பாடலின் வரிகளை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார்.

இப்பாடலினை சின்மயி, கோவிந்த் வசந்தா, பத்ரா ராஜின், நாசர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளார். இந்த பாடலானது 2018-ம் ஆண்டு திங்க் மியூசிக் இந்தியா என்னும் யூடுப் சேனலில் வெளியிடப்பட்டது. ஆனால் இப்பாடலானது திரைப்படத்தினுள் இடம்பெறவில்லை.

படத்தின் விவரங்கள்:

96 என்கிற படத்தினை பிரேம் குமார் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி ராம் என்ற கதாபாத்திரத்திலும், திரிஷா கிருஷ்னன் ஜானு என்ற கதாபாத்திரத்திலும், ஆதித்யா பாஸ்கர் இளமையான ராம் கதாபாத்திரத்திலும், கௌரி கிஷான் இளமையான ஜானு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தில் பாடகி சின்மயி நடிகை ஜானு என்னும் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார்.

இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகன் கதாநாயகி இருவரும் 22 வருடங்களுக்கு பிறகு சந்தித்து தமது காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு இங்கே தொடவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *