Neeyum Naanum Anbe Song Lyrics in Tamil from Imaikkaa Nodigal Movie. Neeyum Naanum Anbe Song Lyrics penned in Tamil by Kabilan Vairamuthu.
படத்தின் பெயர் | இமைக்கா நொடிகள் |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | நீயும் நானும் அன்பே |
இசையமைப்பாளர் | ஹிப் ஹாப் ஆதி |
பாடலாசிரியர் | கபிலன் வைரமுத்து |
பாடகர்கள் | சத்யா பிரகாஷ், ஜித்தின் ராஜ், ரகு டிக்ஸிட் |
பாடல் வரிகள்:
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
ஆயுள் காலம் யாவும்
அன்பே நீயே போதும்
இமைகள் நான்கும் போர்த்தி
இதமாய் நாம் தூங்கலாம்
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி
என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி
தாய் மொழி போலே நீ வாழ்வாய் என்னில்
உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில்
மின்மினி பூவே உன் காதல் கண்ணில்
புதிதாய் கண்டேனே என்னை உன்னில்
தாமதமாய் உன்னை
கண்ட பின்னும்
தாய் மடியாய் வந்தாய்
நான் தூங்கவே
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
உன் தேவையை நான் தீர்க்கவே
வெந்நீரில் மீனாய் நீந்துவேன்
உன் காதலை கடன் வாங்கியே
என்னை நானே தாங்குவேன்
உன் பாதியும் என் மீதியும்
ஒன்றே தான் என்று வாழ்கிறேன்
உன் கண்களில் நீர் சிந்தினால்
அப்போதே செத்து போகிறேன்
சாலை ஓர பூக்கள்
சாய்ந்து நம்மை பார்க்க
நாளை தேவை இல்லை
பெண்ணே நாளும் வாழலாம்
ஓ நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி
என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி
பாடலின் விவரங்கள்:
நீயும் நானும் அன்பே என்னும் பாடலானது இமைக்கா நொடிகள் என்கிற படத்தினுள் இடம்பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தில் அதர்வா, நயன்தாரா, விஜய் சேதுபதி, ராசி கண்ணா, அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். இதற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இதற்கு சத்ய பிரகாஷ், ஜித்தின் ராஜ், ரகு டிக்ஸிட் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். இந்த பாடலானது 2018-ம் ஆண்டு திங்க் மியூசிக் என்னும் யூடுப் சேனலில் வெளியிடப்பட்டது. மேலும் விவரங்களுக்கு இங்கே தொடவும்.