Venpanju Megathil Song Lyrics from Naan Sivappu Manithan Tamil Movie. Venpanju Megathil Song Lyrics has penned in Tamil by Na.Muthukumar
படத்தின் பெயர்: | நான் சிவப்பு மனிதன் |
---|---|
வருடம்: | 2014 |
பாடலின் பெயர்: | வெண்பஞ்சு மேகத்தில் |
இசையமைப்பாளர்: | GV பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர்: | நா.முத்துக்குமார் |
பாடகர்கள்: | GV பிரகாஷ் குமார், சைந்தவி |
பாடல் வரிகள்:
ஆண்: வெண்பஞ்சு மேகத்தில்
என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில்
சாரல் நானடி
ஆண்: கண்ணுக்குள் வீடொன்று
கட்டி தான் வைத்தேனே
அங்கே நீ வந்த பின்னே
கோவில் ஆனதே
ஆண்: இதயம் உன்னை தேடுதே
உயிரும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே
உயிரின் உயிரே
ஆண்: நினைவும் உன்னை தேடுதே
நிழலும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே
உயிரின் உயிரே
ஆண்: அடி பெண்ணே இறந்தாலும்
உன் மடியில் கண்மூடத்தானே
ஓடி வந்து உயிர் விடுவேன்
ஆண்: ஒரு பார்வை நீ பார்த்தால்
அது போதும் அப்போதே நானும்
மீண்டும் மண்மேல் உயிர்த்தெழுவேன்
ஆண்: வெண்பஞ்சு மேகத்தில்
என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில்
சாரல் நானடி
ஆண்: கண்ணுக்குள் வீடொன்று
கட்டி தான் வைத்தேனே
அங்கே நீ வந்த பின்னே
கோவில் ஆனதே
ஆண்: பெண்ணே உன் நெஞ்சுக்குள்
சோகங்கள் கூடாது ஓ
ஆனந்த கண்ணீரில்
அழுதாலும் தாங்காது ஓ
பெண்: இறைவா ஓர் வரம் கொடு ஓ
ஆண்: இவன் எந்தன் மகனாகவே
தினந்தோறும் அழவிடு ஓ
தாயாகி தாலாட்டவே
ஆண்: எங்கே நீ சென்றாலும்
என் கால்கள் எப்போதும்
உன் பின்னே தான் நடக்கும் ஓ
ஆண்: ஆகாயம் சாய்ந்தாலும்
பூலோகம் ஓய்ந்தாலும்
நம் காதல் தான் இருக்கும் ஓ
ஆண்: வெண்பஞ்சு மேகத்தில்
என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில்
சாரல் நானடி
ஆண்: கண்ணுக்குள் வீடொன்று
கட்டி தான் வைத்தேனே
அங்கே நீ வந்த பின்னே
கோவில் ஆனதே
ஆண்: இதயம் உன்னை தேடுதே
உயிரும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே
உயிரின் உயிரே
ஆண்: அடி பெண்ணே இறந்தாலும்
உன் மடியில் கண்மூடத்தானே
ஓடி வந்து உயிர் விடுவேன்
ஆண்: ஒரு பார்வை நீ பார்த்தால்
அது போதும் அப்போதே நானும்
மீண்டும் மண்மேல் உயிர்த்தெழுவேன்