Kanjadai Katti Enna Song Lyrics

Kanjadai Katti Enna Song Lyrics from Anjala Tamil Movie. Kanjada Kati Enna Song Lyrics has written in Tamil by Yugabharathi.

படத்தின் பெயர்:அஞ்சல
வருடம்:2016
பாடலின் பெயர்:கண்ஜாடை காட்டி என்னை
இசையமைப்பாளர்:கோபி சுந்தர்
பாடலாசிரியர்:யுகபாரதி
பாடகர்கள்:VV பிரசன்னா,
வந்தனா ஸ்ரீனிவாசன்

பாடல் வரிகள்:

ஆண்: கண்ஜாடை காட்டி என்னை
கவுத்த செவத்த புள்ளை ஓ
கால் ரெண்டும் தரையில் இருக்கு
ஆனா சொரனை இல்லை

ஆண்: கண்ஜாடை காட்டி என்னை
கவுத்த செவத்த புள்ளை ஓ
கால் ரெண்டும் தரையில் இருக்கு
ஆனா சொரனை இல்லை

ஆண்: கரும்பாறை உனை
பார்த்து விளைஞ்சேனே
சவுக்காரம் என
நானும் கரைஞ்சேனே

பெண்: என் பேரை நீ சொல்ல
ஏதோ ஆகி போனேனே
சொல் ஏதும் இல்லாம
சேர்ந்தேன் தானே
வாய்க்கால் நான் உன்னால்
வைகை போல ஆனேனே

ஆண்: குத்தீட்டி சிரிப்புல
கொத்தோட வனப்புல
கொன்னாலே
துடி துடி துடி துடிக்க

ஆண்: கண்ஜாடை காட்டி என்னை
கவுத்த செவத்த புள்ளை ஓ
கால் ரெண்டும் தரையில் இருக்கு
ஆனா சொரனை இல்லை

ஆண்: தாயோட வாசம்
அறிஞ்சேனே உனக்குள்ள
தன்னால நான் என்னை
தரப்போறேன் புள்ளை

பெண்: பாதாது கேசம்
உனைச்சேர தடையில்லை
பஞ்சாங்கம் நீ பார்த்து
தொட வேணும் மெல்ல

ஆண்: சிங்கார சீமையே
அண்ணாந்து பாத்திட
மங்காத காதல் பூவை
மாலையாக்கி நான் போட

பெண்: கூட கூட அப்ப வாட
பூத்து போவேன் நீயும் சூட

ஆண்: கண்ஜாடை காட்டி என்னை
கவுத்த செவத்த புள்ளை ஓ
கால் ரெண்டும் தரையில் இருக்கு
ஆனா சொரனை இல்லை

ஆண்: நீ பார்த்த பார்வை
ஒரு நாளும் நரைக்காது
நரை வந்து சேர்ந்தாலும்
அழகை குறைக்காது

பெண்: நீ பேசும் பேச்சு
ஒரு போதும் நடிக்காது
வயசாகி போனாலும்
பழசை மறக்காது

ஆண்: பாக்காத பார்வையும்
கேட்காம கேட்டிட
காயாத ஈரம் போல
காதல் தூறும் நெஞ்சோட

பெண்: ஆசை கூட அன்பு கூட
வாழ்ந்து போவும் கூட மாட

ஆண்: கண்ஜாடை காட்டி என்னை
கவுத்த செவத்த புள்ளை ஓ
கால் ரெண்டும் தரையில் இருக்கு
ஆனா சொரனை இல்லை

பெண்: கண்ஜாடை காட்டி என்னை
கவுத்த கலரு பையா ஓ
கலவாணி பயலே உனக்கு
காரணம் விளங்கலையா

ஆண்: கரும்பாறை உனை
பார்த்து விளைஞ்சேனே
சவுக்காரம் என
நானும் கரைஞ்சேனே

பெண்: என் பேரை நீ சொல்ல
ஏதோ ஆகி போனேனே
சொல் ஏதும் இல்லாம
சேர்ந்தேன் தானே
வாய்க்கால் நான் உன்னால்
வைகை போல ஆனேனே

ஆண்: குத்தீட்டி சிரிப்புல
கொத்தோட வனப்புல
கொன்னாலே
துடி துடி துடி துடிக்க