Un Per Solla Aasai Thaan Song Lyrics

Un Per Solla Aasai Thaan Song Lyrics from Minsara Kanna Tamil Movie. Un Per Solla Aasai Thaan Song Lyrics penned in Tamil by Kalaikumar.

படத்தின் பெயர்:மின்சார கண்ணா
வருடம்:1999
பாடலின் பெயர்:உன் பேர் சொல்ல
இசையமைப்பாளர்:தேவா
பாடலாசிரியர்:கலைக்குமார்
பாடகர்கள்:ஹரிஹரன்,
சுஜாதா மோகன்

பாடல் வரிகள்:

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்

உன்தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும்
ஒன்றாய் ஆக ஆசைதான்

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்

கண்ணில் கடைக் கண்ணில்
நீயும் பார்த்தால் போதுமே
கால்கள் எந்தன் கால்கள்
காதல் கோலம் போடுமே

நாணம் கொண்டு மேகம்
ஒன்றில் மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை
நீயும் மூடும் அழகென்ன

தூக்கத்தில் உன்பேரை நான் சொல்ல
காரணம் காதல் தானே
பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன்தான்
உன்னைப் படைத்ததாலே

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்

நீயும் என்னைப் பிரிந்தால்
எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால்
மறு பிறவி தொடருமே

நீயும் கோவில் ஆனால்
சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபம் ஆனால்
ஒளியும் நானே ஆகிறேன்

வானின்றி வெண்ணிலா இங்கில்லை
நாம் இன்றி காதல் இல்லையே
காலம் கரைந்த பின்னும் கூந்தல் நரைத்த
பின்னும் அன்பில் மாற்றம் இல்லையே

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்

உன்தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும்
ஒன்றாய் ஆக ஆசைதான்

ஆசைதான் உன்மேல் ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்