Pattina Pravesam Movie Vaan Nila Nila Alla Song Lyrics in Tamil Font. Vaan Nila Nila Alla Song Tamil Lyrics has penned by Kannadasan.
படத்தின் பெயர்: | பட்டினப்பிரவேசம் |
---|---|
வருடம்: | 1977 |
பாடலின் பெயர்: | வான் நிலா நிலா அல்ல |
இசையமைப்பாளர்: | எம்.எஸ்.விஸ்வநாதன் |
பாடலாசிரியர்: | கண்ணதாசன் |
பாடகர்கள்: | எஸ்.பி.பாலசுப்ரமணியம் |
Vaan Nila Nila Alla Lyrics in Tamil
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா
நீயிலாத நாளெல்லாம்
நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
மானிலாத ஊரிலே
சாயல் கண்ணிலா
மானிலாத ஊரிலே
சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே
ஜாடை பெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
தெய்வம் கல்லிலா
ஒரு தோகையின் சொல்லிலா
தெய்வம் கல்லிலா
ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா பொட்டிலா
புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா
அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா
ஊடலா கூடலா
அவள் மீட்டும் பண்ணிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
வாழ்க்கை வழியிலா
ஒரு மங்கையின் ஒளியிலா
வாழ்க்கை வழியிலா
ஒரு மங்கையின் ஒளியிலா
ஊரிலா நாட்டிலா
ஆனந்தம் வீட்டிலா
அவள் நெஞ்சின் ஏட்டிலா
சொந்தம் இருளிலா
ஒரு பூவையின் அருளிலா
சொந்தம் இருளிலா
ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள்
என்னிலா கொண்டதேன்
அதைச் சொல்வாய் வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம்
நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
Short Info
பட்டினப் பிரவேசம் என்பது 1977 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி திரைப்படம் ஆகும். இதனை கே.பாலச்சந்தர் எழுதி இயக்கியுள்ளார். இது அதே பெயரின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது இதனை விசு எழுதி அதே ஆண்டில் அரங்கேற்றினார். இதன்மூலம் டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் மற்றும் சரத் பாபு ஆகிய மூவரும் தங்களது சினிமா நடிப்பைத் தொடங்கினர். மேலும் அறிய.