Pattina Pravesam Movie Dharmathin Kannai Katti Song Lyrics in Tamil. Dharmathin Kannai Katti Song Tamil Lyrics has penned by Kannadasan.
படத்தின் பெயர்: | பட்டினப்பிரவேசம் |
---|---|
வருடம்: | 1977 |
பாடலின் பெயர்: | தர்மத்தின் கண்ணைக் கட்டி |
இசையமைப்பாளர்: | எம்.எஸ்.விஸ்வநாதன் |
பாடலாசிரியர்: | கண்ணதாசன் |
பாடகர்கள்: | எம்.எஸ்.விஸ்வநாதன் |
பாடல் வரிகள்:
தர்மத்தின் கண்ணைக் கட்டி
நகரத்தில் ஆட விட்டு
இதுதானே நாகரீகம் என்றான்
நம்பி எவன் எவனோ இங்கு வந்தான்
தர்மத்தின் கண்ணைக் கட்டி
நகரத்தில் ஆட விட்டு
இதுதானே நாகரீகம் என்றான்
நம்பி எவன் எவனோ இங்கு வந்தான்
வேங்கைககள் கூட இங்கு
வேதாந்தம் பேசும்
வேட்டைகள் ஆடும்வரை இதுதான்
வேஷங்கள் போடும் வகை
தர்மத்தின் கண்ணைக் கட்டி
நகரத்தில் ஆட விட்டு
இதுதானே நாகரீகம் என்றான்
நம்பி எவன் எவனோ இங்கு வந்தான்
ராமனின் உள்ளிருக்கும்
இராவணன் இங்கு உண்டு
சீதையும் இங்கு வந்தால்
சோதனை கோடி உண்டு
ஆதிக்கவாசிகள் சொர்க்கம் இது
நீதிக்கும் நேர்மைக்கும் நரகம் இது
தர்மத்தின் கண்ணைக் கட்டி
நகரத்தில் ஆட விட்டு
இதுதானே நாகரீகம் என்றான்
நம்பி எவன் எவனோ இங்கு வந்தான்
பாடுபட்ட பேர்களெல்லாம்
பட்ட பலன் பெற்றதில்லை
பயன் பெற்ற பேர்களெல்லாம்
பாடுபட்டு பெற்றதில்லை
அவனவன் செல்வங்கள்
அவனுடைமை இங்கு
அடுத்தவர் செல்வங்கள்
பொதுவுடைமை
தர்மத்தின் கண்ணைக் கட்டி
நகரத்தில் ஆட விட்டு
இதுதானே நாகரீகம் என்றான்
நம்பி எவன் எவனோ இங்கு வந்தான்
கல்லையும் வைரம் என்பான்
கழுதையை குதிரை என்பான்
புல்லையும் தென்னை என்பான்
பூனையை யானை என்பான்
யாரையும் பட்டிணம்
கெடுத்து விடும்
ஆண்டவனாகட்டும்
அவனையும் மாற்றி விடும்
தர்மத்தின் கண்ணைக் கட்டி
நகரத்தில் ஆட விட்டு
இதுதானே நாகரீகம் என்றான்
நம்பி எவன் எவனோ இங்கு வந்தான்
சிறுகுறிப்பு:
பட்டினப் பிரவேசம் என்பது 1977 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி திரைப்படம் ஆகும். இதனை கே.பாலச்சந்தர் எழுதி இயக்கியுள்ளார். இது அதே பெயரின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது இதனை விசு எழுதி அதே ஆண்டில் அரங்கேற்றினார். இதன்மூலம் டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் மற்றும் சரத் பாபு ஆகிய மூவரும் தங்களது சினிமா நடிப்பைத் தொடங்கினர். மேலும் அறிய.