Paadatha Pattellam Song Lyrics in Tamil from Rudhran Movie. Paadatha Pattellam Song Lyrics has penned in Tamil by Kannadasan.
பாடல்: | பாடாத பாட்டெல்லாம் |
---|---|
படம்: | ருத்ரன் |
வருடம்: | 2023 |
இசை: | தரண் குமார் |
வரிகள்: | கண்ணதாசன் |
பாடகர்: | சத்ய பிரகாஷ், Emcee D, நித்யஸ்ரீ வெங்கட்ராமன் |
Paadatha Pattellam Lyrics in Tamil
ஆண்: மைமா கேரா ஆக்கிட்டா
லோக்கலு பையன் என்ன
மாத்திட்டு தூக்கிட்டு போறாளே இவ
இவதானே என்னோட மைனா
காதல சொல்லிட்டு மாத்திட்டா சீனா
ஆண்: ஊருக்குள்ள மாமா மவுச பாரு
தாருமாறு இனி வேற யாரு
கருப்புல நா நெருப்பா இருப்பேன்
என் கதையில ஒழுங்கா நடப்பேன்
ஆண்: உந்தன் அழகை கண்டிட
ஹேய் ஆயிரம் கண்களும் போதாது
ஹா ஹா ஹே பெண்ணே
இமை அழகிலே விசித்திரம் உண்டு
கண்டதும் காதலும் வந்தது உன்னிடம்
ஆண்: பாடாத பாடாத
பாடாத பாட்டெல்லாம்
பாட வந்தாள்
காணாத கண்களை
காண வந்தாள்
ஆண்: பேசாத மொழியெல்லாம்
பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே
ஆட வந்தாள்
பெண்: பாடாத பாட்டெல்லாம்
பாட வந்தேன்
காணாத கண்களை
காண வந்தேன்
பெண்: பேசாத மொழியெல்லாம்
பேச வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே
ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே
ஆட வந்தேன்
ஆண்: அதிசயம் என்னில் நிகழ்ந்தது
அவசியம் உந்தன் வருகை தந்தது
அவசியம் உனது வருகை
இருதய கதவுகளும் ஏங்குது
ஆண்: ஆயிரத்தில் ஒருவனாக்கினாய்
ஆதி முதல் அந்தமும் மாற்றினாய்
கண்ணை கட்டினாய் ஆசை மூட்டினாய்
கூந்தல் அசைவிலே தென்றல் வீசினாய்
ஆண்: மேலாடை தென்றலில்
ஹா ஹா ஹா
பூவாடை வந்ததே
ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
பெண்: மேலாடை தென்றலில்
ஹா ஹா ஹா
பூவாடை வந்ததே
ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
ஆண்: கையோடு வளையலும்
ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா
சொல் சொல் சொல்
பெண்: பாடாத பாட்டெல்லாம்
பாட வந்தேன்
காணாத கண்களை
காண வந்தேன்
பெண்: பேசாத மொழியெல்லாம்
பேச வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே
ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே
ஆட வந்தேன்
ஆண்: பாடாத பாடாத
பெண்: ஆ… ஆ… ஆ…
பெண்: அச்சமா நாணமா
இன்னும் வேண்டுமா
அஞ்சினால் நெஞ்சிலே
காதல் தோன்றுமா
ஆண்: அச்சமா நாணமா
இன்னும் வேண்டுமா
அஞ்சினால் நெஞ்சிலே
காதல் தோன்றுமா
பெண்: மிச்சமா மீதமா
இந்த நாடகம்
ஆண்: மென்மையே பெண்மையே
வா வா வா
பெண்: நிலவிலே நிலவிலே
சேதி வந்ததா
உறவிலே உறவிலே
ஆசை வந்ததா
ஆண்: நிலவிலே நிலவிலே
சேதி வந்ததா
உறவிலே உறவிலே
ஆசை வந்ததா
பெண்: மறைவிலே மறைவிலே
ஆடலாகுமா
இருவர்: அருகிலே அருகிலே அருகிலே
வந்து பேசவா
ஆண்: பாடாத பாட்டெல்லாம்
பாட வந்தாய்
பெண்: காணாத கண்களை
காண வந்தேன்
ஆண்: பேசாத மொழியெல்லாம்
பேச வந்தாய்
பெண்: உன் ஆசை நெஞ்சிலே
ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே
ஆட வந்தேன்
Short Notes
“பாடாத பாட்டெல்லாம்” என்ற பாடலானது 2023 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “ருத்ரன்” என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் “ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ்” ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையினை KP திருமாறன் எழுத, S கதிரேசன் தனது ” Five Star Creations” நிறுவனத்தின் கீழ் தயாரித்து இயக்கியுள்ளார்.
இதனை RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படத்தொகுப்பு பணிகளை அந்தோணி மேற்கொண்டுள்ளார்.
சாம் CS திரைப்படத்தின் பின்னணியை இசையமைத்துள்ளார். GV பிரகாஷ் குமார், தரன் குமார், ofRo ஆகியோர் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்.
கண்ணதாசன், கபிலன், கருணாகரன், அசல் கோலார் ஆகியோர் இப்படத்தின் பாடல் வரிகளை இயற்றியுள்ளனர்.
சத்யபிரகாஷ், நித்யஸ்ரீ வெங்கடராமன், Emcee D, திவாக்கர், சித் ஸ்ரீராம், அசல் கோலார் முதலானோர் இதன் பாடல்களை பாடியுள்ளனர்.
இது தமிழ் புத்தாண்டு தினமான 14 April 2023 அன்று திரையரங்குகளில் வெளியானது. மேலும் ருத்ரன் திரைப்படம் பற்றி அறிய Wikipedia மற்றும் IMDb.