Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Vaangadi Chittukkala Song Lyrics in Tamil

Pattina Pravesam Movie Vaangadi Chittukkala Song Lyrics in Tamil. Vaangadi Chittukkala Song Tamil Lyrics Has Penned by Kannadasan.

படத்தின் பெயர்:பட்டினப்பிரவேசம்
வருடம்:1977
பாடலின் பெயர்:வாங்கடி சிட்டுகளா
இசையமைப்பாளர்:எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்:கண்ணதாசன்
பாடகர்கள்:எல்.ஆர்.ஈஸ்வரி

பாடல் வரிகள்:

வாங்கடி சிட்டுகளா இங்கே
வட்டமிட்டு பாட்டுப் படிப்போம்
மல்லிகைப்பூ மொட்டுக்களா கலை
மான்களுக்கும் கத்து கொடுப்போம்

வாங்கடி சிட்டுகளா இங்கே
வட்டமிட்டு பாட்டுப் படிப்போம்
மல்லிகைப்பூ மொட்டுக்களா கலை
மான்களுக்கும் கத்து கொடுப்போம்

ஆத்துக்குள்ளே காத்து விழுந்து
சுகம் ஊற்றெடுத்து போடும் விருந்து
நாத்துக்குள்ளே பூந்து நடந்து என்னை
மாத்துதடி சேலை பறந்து ஹோய் ஹோய்
என்னை மாத்துதடி சேலை பறந்து

வாங்கடி சிட்டுகளா இங்கே
வட்டமிட்டு பாட்டுப் படிப்போம்
மல்லிகைப்பூ மொட்டுக்களா கலை
மான்களுக்கும் கத்து கொடுப்போம்

செம்பருத்தி பூவை எடுத்து நல்லா
தேய்ச்சிவிட்டு கன்னம் திருத்து
பட்டிணத்தைக் கட்டி இழுத்து எந்தன்
பக்கத்திலே கொண்டு நிறுத்து ஹோய் ஹோய்
எந்தன் பக்கத்திலே கொண்டு நிறுத்து

வாங்கடி சிட்டுகளா இங்கே
வட்டமிட்டு பாட்டுப் படிப்போம்
மல்லிகைப்பூ மொட்டுக்களா கலை
மான்களுக்கும் கத்து கொடுப்போம்

ஒத்தையடி ஊரணிக் கரை
பொண்ணு ஓடட்டுமே பங்குனி வரை
மாலையிடும் மாதம் சித்திரை பின்னர்
மாமன் மகள் போடும் முத்திரை

வாங்கடி சிட்டுகளா இங்கே
வட்டமிட்டு பாட்டுப் படிப்போம்
மல்லிகைப்பூ மொட்டுக்களா கலை
மான்களுக்கும் கத்து கொடுப்போம்

சிறுகுறிப்பு:

பட்டினப் பிரவேசம் என்பது 1977 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி திரைப்படம் ஆகும். இதனை கே.பாலச்சந்தர் எழுதி இயக்கியுள்ளார். இது அதே பெயரின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது இதனை விசு எழுதி அதே ஆண்டில் அரங்கேற்றினார். இதன்மூலம் டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் மற்றும் சரத் பாபு ஆகிய மூவரும் தங்களது சினிமா நடிப்பைத் தொடங்கினர். மேலும் அறிய.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.