Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

வா வா என் தேவதையே | Va Va En Devathaye Song Lyrics in Tamil

Va Va En Devathaye Song Lyrics in Tamil from Abhiyum Naanum Movie. Va Va En Devathaye Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

பாடல்:வா வா என் தேவதையே
படம்:அபியும் நானும்
வருடம்:2008
இசை:வித்யாசாகர்
வரிகள்:வைரமுத்து
பாடகர்:மது பாலகிருஷ்ணன்

Va Va En Devathaye Lyrics in Tamil

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா

வான் மிதக்கும் கண்களுக்கு
மயில் இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா

செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற
சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு
புன்னகைக்க தெரியவில்லை

என் பிள்ளை எட்டு வைத்த
நடையைப்போல எந்த இலக்கண
கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெறிக்கின்ற
மழலை போல ஒரு முன்னூறு
மொழிகளில் வார்த்தை இல்லை

தந்தைக்கும் தாய் அமுதம்
சுரந்ததம்மா என் தங்கத்தை
மார்போடு அணைக்கையிலே

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா

பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம்
துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கையிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற
அழகை கண்டேன்

சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது
என்னை பெற்றவள்
சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது
இவள் மீசையில்லாத
மகன் என்று சொன்னேன்

பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப்
பார்த்துக் கொண்டேன்

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா

வான் மிதக்கும் கண்களுக்கு
மயில் இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா

Short Notes

வா வா என் தேவதையே” என்ற பாடலானது 2008 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “அபியும் நானும்” என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் “பிரகாஷ் ராஜ், த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கணேஷ் வெங்கட்ராமன்” ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையினை ராதா மோகன் எழுதி இயக்கியுள்ளார். சிபி நாராயணன், R சுப்ரமணியன்
இருவரும் படத்தின் வசனங்களை எழுதுயுள்ளனர்.

இதனை ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படத்தொகுப்பு பணிகளை மார்த்தாண்டன் K வெங்கடேசன் மேற்கொண்டுள்ளார்.

வித்யாசாகர் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணியை இசையமைத்துள்ளார். வைரமுத்து இப்படத்தின் பாடல் வரிகளை இயற்றியுள்ளனர்.

SP பாலசுப்ரமணியம், கைலாஷ் கெர், மது பாலகிருஷ்ணன், சாதனா சர்கம், ரெஹான் கான் முதலானோர் இதன் பாடல்களை பாடியுள்ளனர்.

இது 19 டிசம்பர் 2008 அன்று திரையரங்குகளில் வெளியானது. மேலும் அபியும் நானும் திரைப்படம் பற்றி அறிய Wikipedia மற்றும் IMDb.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.