Oru Deivam Thantha Poove Song Lyrics

Oru Deivam Thantha Poove Song Lyrics from Kannathil Muthamittal Tamil Movie. Oru Deivam Thantha Poove Song Lyrics penned by Vairamuthu.

படத்தின் பெயர்:கன்னத்தில் முத்தமிட்டாள்
வருடம்:2002
பாடலின் பெயர்:ஒரு தெய்வம் தந்த பூவே
இசையமைப்பாளர்:AR ரஹ்மான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:சின்மயீ, ஜெயச்சந்திரன்

பாடல் வரிகள்:

ஆண்: நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ
கன்னத்தில் முத்தமிட்டால்

ஆண்: நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ
கன்னத்தில் முத்தமிட்டால்

பெண்: ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே

பெண்: வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
வானம் முடியுமிடம் நீதானே
காற்றைப் போல நீ வந்தாயே
சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே

பெண்: ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே

ஆண்: நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ
கன்னத்தில் முத்தமிட்டால்

ஆண்: நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ
கன்னத்தில் முத்தமிட்டால்

பெண்: எனது சொந்தம் நீ
எனது பகையும் நீ
காதல் மலரும் நீ
கருவில் முள்ளும் நீ

பெண்: செல்ல மழையும் நீ
சின்ன இடியும் நீ
செல்ல மழையும் நீ
சின்ன இடியும் நீ

பெண்: பிறந்த உடலும் நீ
பிரியும் உயிரும் நீ
பிறந்த உடலும் நீ
பிரியும் உயிரும் நீ
மரணம் ஈன்ற ஜனனம் நீ

பெண்: ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே

ஆண்: நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ
கன்னத்தில் முத்தமிட்டால்