Nenjinile Nenjinile Song Lyrics from Uyire Tamil Movie. Nenjinile Nenjinile Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | உயிரே |
---|---|
வருடம்: | 1998 |
பாடலின் பெயர்: | நெஞ்சினிலே நெஞ்சினிலே |
இசையமைப்பாளர்: | AR ரஹ்மான் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | S ஜானகி |
பாடல் வரிகள்:
பெண்: நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
குழு: கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ
முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும்
தங்க நிலாவே ஹோய்
குழு: கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ
முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும்
தங்க நிலாவே ஹோய்
பெண்கள்: தங்கக் கொலுசல்லி
கொலுங் குயில்லல்லி
மாரன மயில்லல்லி ஹோய்
தங்கக் கொலுசல்லி
கொலுங் குயில்லல்லி
மாரன மயில்லல்லி ஹோய்
பெண்: நெஞ்சினிலே நெஞ்சினிலே
ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
பெண்: நெஞ்சினிலே நெஞ்சினிலே
ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு
என் உள்ளே நெஞ்சினிலே ஊஞ்சலே
பெண்: ஓரப் பார்வை வீசுவான்
உயிரின் கயிறில் அவிழ்குமே
ஓரப் பார்வை வீசுவான்
உயிரின் கயிறில் அவிழ்குமே
செவ்விதழ் வருடும்போது
தேகத்தங்கம் உருகுமே
பெண்: உலகின் ஓசை அடங்கும்போது
உயிரின் ஓசை தொடங்குமே
வான் நிலா நாணுமே முகில்
இழுத்துக் கண் மூடுமே
பெண்: நெஞ்சினிலே நெஞ்சினிலே
ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு
என் உள்ளே நெஞ்சினிலே ஊஞ்சலே
குழு: குருவாரி கிளியே
குருவாரி கிளியே
குக்குரு குக்குரு கூவிக் குருகிக்
குன்னிமனத்தை ஊயல் ஆடிக்
கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக்
குருகிக் கூட்டு விழிக்கின்னே
குழு: குக்குரு குக்குரு கூவிக் குருகிக்
குன்னிமனத்தை ஊயல் ஆடிக்
கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக்
குருகிக் கூட்டு விழிக்கின்னே
பெண்கள்: தங்கக் கொலுசல்லி
கொலுங் குயில்லல்லி
மாரன மயில்லல்லி ஹோய்
தங்கக் கொலுசல்லி
கொலுங் குயில்லல்லி
மாரன மயில்லல்லி ஹோய்
பெண்: குங்குமம் ஏன் சூடினேன்
கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன்
கூடல் பொழுதில் கசங்கத்தான்
பெண்: மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு
கட்டில்மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே
புதிய பொருள் நாம் தேடத்தான்
பெண்கள்: நெஞ்சினிலே நெஞ்சினிலே
ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு
என் உள்ளே நெஞ்சினிலே
நெஞ்சினிலே ஊஞ்சலே