Unnodu Vazhatha Song Lyrics from Amarkalam Tamil Movie. Unnodu Vazhatha Vazhvenna Vazhvu Song Lyrics penned in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | அமர்க்களம் |
---|---|
வருடம்: | 1999 |
பாடலின் பெயர்: | உன்னோடு வாழாத |
இசையமைப்பாளர்: | பரத்வாஜ் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | KS சித்ரா |
பாடல் வரிகள்:
உன்னோடு வாழாத
வாழ்வென்ன வாழ்வு
என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத
காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்குதே
நான் பிறக்குமுன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ
உந்தன் கையில் என்னை ஏந்தத்தானா
உன்னோடு வாழாத
வாழ்வென்ன வாழ்வு
என் உள்நெஞ்சு சொல்கின்றது
மெல்லிய ஆண்மகனை
பெண்ணுக்கு பிடிக்காது
முறடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்துவிடும்
ஆடவன் பிடிக்காது
கர்வம் அதை மதித்தேன்
முடி குத்தும் உந்தன் மார்பு
என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் திறக்கும் முத்தம்
அது என்ன வித்தையோ
உன்னைப் போலே ஆண்ணில்லையே
நீயும் போனால் நான்னில்லையே
நீர் அடிப்பதாலே மீன் அழுவதில்லையே
ஆம் நமக்குள் ஊடலில்லை
உன்னோடு வாழாத
வாழ்வென்ன வாழ்வு
என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத
காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
நீ ஒரு தீ என்றால்
நான் குளிர் காய்வேன்
அன்பே தீயாய் இரு
நீ ஒரு முள் என்றால்
நான் அதில் ரோஜா
அன்பே முள்ளாய் இரு
நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன்
உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை
என் மாட மாளிகை
காதலோடு பேதம் இல்லை
உன்னோடு வாழாத
வாழ்வென்ன வாழ்வு
என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்குதே
நான் பிறக்குமுன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ
உந்தன் கையில் என்னை ஏந்தத்தானா