Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Usurukul Un Pera Eluthi Vachen Song Lyrics

Usurukul Un Pera Eluthi Vachen Song Lyrics in Tamil from Para Movie. Usurukul Un Pera Eluthi Vachen Song Lyrics has penned by Snehan.

பாடலின் பெயர்: உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
படத்தின் பெயர்: பற
வருடம்: 2019
இசையமைப்பாளர்: எம்.எஸ்.ஸ்ரீகாந்த்
பாடலாசிரியர்: சிநேகன்
பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம்,
கேஷவ் வினோத்

Usurukul Un Pera Lyrics in Tamil

பெண்: உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன்

பெண்: உன்மேல மட்டும்தான்
ஆச வெச்சேன்
என்கிட்டே என்ன நான்
பேச வெச்சேன்

ஆண்: உன் பார்வை பட்ட நேரம்
நான் வேர் அறுந்து போனேன்
உன் வேர்வ பட்டதால
ஊர் அறுந்து போனேனே

பெண்: உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன் ஹோ

பெண்: நீ எனக்கு போதும்
நான் நெறஞ்சு வழியுறேன்
பூமி பந்த போல
நான் தான சொழலுறேன்

ஆண்: நத்த கூட்ட போல
நான் உனக்குள் அடங்குறேன்
சத்தமின்றி உன்ன
நான் முழுசா முழுங்குறேன்

பெண்: குலசாமி போலத்தான்
என் முன்னால நிக்குற
மரங்கொத்தி போலத்தான்
என்ன நீ கொத்துற

ஆண்: ஒரு கோழி குஞ்ச போல
என்ன பொத்தி வைக்குற
இந்த பாவி நெஞ்சுக்குள்ள
சிறுவாட சேக்குற

பெண்: வெள்ளந்தி பாசத்த
வெல பேச யாருமில்லை

பெண்: உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன்

பெண்: உள்ளங்கை ரேகை
உன் பேர சொல்லுதே
உள்ளுக்குள்ள வெக்கம்
என்னை குத்தி கொல்லுதே

ஆண்: உள்ளங்காலு நிழலா
என்ன ஒட்ட வெச்சுட்ட
உசுர மட்டும் பிச்சு
நீ வெளிய நட்டுட்ட

பெண்: ஆகாயம் போல நீ
எங்கேயும் நிக்குற
அப்பப்போ என்ன நீ
பூ பூக்க வைக்குற

ஆண்: அடி நீயும் நானும் வாழ
ஒரு கோவில் கட்டுவேன்
உன்ன யாரு தீண்டினாலும்
நான் நின்னு வெட்டுவேன்

பெண்: என் சாமி நீதான்டா
உன்ன விட்டு போகமாட்டேன்

ஆண்: உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன்

பெண்: உன்மேல மட்டும்தான்
ஆச வெச்சேன்
என்கிட்டே என்ன நான்
பேச வெச்சேன்

ஆண்: உன் பார்வை பட்ட நேரம்
நான் வேர் அறுந்து போனேன்
உன் வேர்வ பட்டதால
ஊர் அறுந்து போனேனே

பெண்: உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன் ஹோ…


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.