Un Thalai Mudi Song Lyrics in Tamil from Kadhalil Vizhunthen Movie. Un Thalai Mudi Song Lyrics has penned in Tamil by Nepolian.
பாடல்: | உன் தலைமுடி |
---|---|
படம்: | காதலில் விழுந்தேன் |
வருடம்: | 2008 |
இசை: | விஜய் ஆன்டனி |
வரிகள்: | நெப்போலியன் |
பாடகர்: | கார்த்திக், மிதிஸ் கோபாலன், மாயா |
Un Thalai Mudi Lyrics in Tamil
பெண்: உன் தலைமுடி
உதிர்வதைக்கூட
தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில்
உன்னை நான் தாங்குவேன்
பெண்: உன் ஒரு நொடி
பிரிவினைக்கூட
ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும்
உன் முகம் தேடுவேன்
பெண்: உன்னை வானத்தில் தேடியே
மேகம் கண்ணீரை சிந்துதோ
உன்னை நான் கண்டு சேரவே
பூமி என்னோடு சுற்றுதோ
பெண்: உன் தலைமுடி
உதிர்வதைக்கூட
தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில்
உன்னை நான் தாங்குவேன்
பெண்: உன் ஒரு நொடி
பிரிவினைக்கூட
ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும்
உன் முகம் தேடுவேன்
ஆண்: உச்சந்தலை மீது
நீ கொடுக்கும் முத்தம்
உயிரின் மீது பட்டுத் தெறிக்கும்
கைகள் பற்றிக்கொண்டு
பேசிக்கொள்ளும் நேரம் இனிக்கும்
ஆண்: எதிர் வரும் காற்று
உன் பெயரை என்னில்
தினமும் கிறுக்கிவிட்டுப் போகும்
நெற்றிப் பொட்டுக்குள்ளே
கொட்டிவிட்டேன் என்னை முழுதும்
பெண்: உன் கண்ணில் பட்ட பூவை
கூந்தலுக்குள் வைப்பேன்
காலில் பட்ட கல்லை
மூக்குத்தியில் வைப்பேன்
கையில் பட்ட என்னை
உன் இதயப் பையில் வைப்பேன்
என்னைக் கொடுப்பேன்
பெண்: உன் தலைமுடி
உதிர்வதைக்கூட
தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில்
உன்னை நான் தாங்குவேன்
பெண்: உன் ஒரு நொடி
பிரிவினைக்கூட
ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும்
உன் முகம் தேடுவேன்
பெண்: நீயும் என்னை தினம்
தேட வேண்டும் என்று
தொலைந்துப் போக கொஞ்சம் ஆசை
நான் அணைத்து தூங்கும்
மீசை வைத்த பொம்மை நீயே
பெண்: மேய்ச்சல் நிலமாக
விழுந்து கிடக்கிறேன்
மேய்ந்துக் கொள் என்னை முழுதும்
தொட்டில் இன்றி தூங்கும்
என் மார்பில் உந்தன் முத்தம் தினமும்
ஆண்: உன்னைப் பற்றி ஏறும்
காதல் கொடி நானே
உன் கையெழுத்தைத் தாங்கும்
காகிதமும் நானே
உன் உள்ளங்கையில் சுற்றும்
பம்பரமும் நானே
எந்தன் உயிரே ஓஹோ
ஆண்: உன் தலைமுடி
உதிர்வதைக்கூட
தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில்
உன்னை நான் தாங்குவேன்
ஆண்: உன் ஒரு நொடி
பிரிவினைக்கூட
ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும்
உன் முகம் தேடுவேன்
ஆண்: உன்னை வானத்தில் தேடியே
மேகம் கண்ணீரை சிந்துதோ
உன்னை நான் கண்டு சேரவே
பூமி என்னோடு சுற்றுதோ