Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Thilana Thilana Song Lyrics in Tamil

Thilana Thilana Song Lyrics in Tamil from Muthu Movie. Thillana Thillana or Thilana Thilana Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

பாடல்:தில்லானா தில்லானா
படம்:முத்து
வருடம்:1995
இசை:AR ரஹ்மான்
வரிகள்:வைரமுத்து
பாடகர்:மனோ, சுஜாதா மோகன்

Thilana Thilana Lyrics in Tamil

பெண்: ஆ ஆ ஆஆஆ
ஆ ஆ ஆஆஆ
ஆ ஆ ஆஆஆ

ஆண்: தில்லானா தில்லானா
நீ தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு
நெஞ்சில் தில்லானா

ஆண்: தில்லானா தில்லானா
நீ தித்திக்கின்ற தேனா
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா

ஆண்: ஹோ மஞ்சக் காட்டு மைனா
என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா

பெண்: ஆ ஆ ஆஆஆ
ஆ ஆ ஆஆஆ
ஆ ஆ ஆஆஆ

ஆண்: கண்ணு வெச்சதும் நீதானா
வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட
காமன் சொன்னானா

ஆண்: தில்லானா தில்லானா
பெண்: நான் தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா

ஆண்: மஞ்சக் காட்டு மைனா
பெண்: உன்ன கொஞ்சி
கொஞ்சி போனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா

பெண்: ஆ ஆ ஆஆஆ
ஆ ஆ ஆஆஆ
ஆ ஆ ஆஆஆ

பெண்: பட்டிக்காட்டு முத்து நீயோ
படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத் தானே
துடித்தாளே ராதை

ஆண்: கள்ளம் கபடமில்லை நானோ
அறியாத பேதை
மக்கள் மனம் தானே எந்தன்
வழுக்காத பாதை

பெண்: கொடுத்தால நான் வந்தேன்
எடுத்தால வேண்டாமா
ஆண்: அடுத்தாளு பாராமல்
தடுத்தாள வேண்டாமா

பெண்: முடி கொண்ட உன் மார்பில்
முகம் சாய்க்க வேண்டாமா
ஆண்: முடி போட்டு நம் சொந்தம்
முடிவாக வேண்டாமா

பெண்: தடையேதும் இல்லாமல்
தனித்தாள வேண்டாமா

இருவரும்: தில்லானா தில்லானா
பெண்: நான் தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா

இருவரும்: மஞ்சக் காட்டு மைனா
பெண்: உன்ன கொஞ்சி
கொஞ்சிப் போனா
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா

ஆண்: கண்ணு வெச்சதும் நீதானா
வெடி கண்ணி வெச்சதும் நீதானா

பெண்: கட்டில் போட்டு
நீ கப்பம் கட்ட
காமன் சொன்னானா

பெண்: திக்குத் திக்கு நெஞ்சில்
திக்குத் திக்கு நெஞ்சில்
திக்குத் திக்கு நெஞ்சில்
திக்குத் திக்கு நெஞ்சில்

ஆண்: சிவப்பான ஆண்கள் இங்கே
சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு
கண் வைத்ததென்ன

பெண்: கடல் வண்ணம்
வானின் வண்ணம்
கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது
உனைக் கண்டேன் நானே

ஆண்: மண்ணோடு சேராமல்
நடக்கின்றேன் உன்னாலே
பெண்: மருதாணி பூசாமல்
சிவக்கின்றேன் உன்னாலே

ஆண்: சுட்டுவிழி கண்டாலே
சொக்குதடி தன்னாலே
பெண்: சிக்குப்பட்ட எள் போலே
நொக்குபட்டேன் உன்னாலே

ஆண்: கட்டுத்தறி காளை நானும்
கட்டுப்பட்டேன் உன்னாலே

ஆண்: தில்லானா தில்லானா
நீ தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு
நெஞ்சில் தில்லானா

ஆண்: தில்லானா தில்லானா
நீ தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு
நெஞ்சில் தில்லானா

ஆண்: ஹோ மஞ்ச காட்டு மைனா
என்ன கொஞ்சி கொஞ்சி போனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா

பெண்: ஆ ஆ ஆஆஆ
ஆ ஆ ஆஆஆ
ஆ ஆ ஆஆஆ

ஆண்: கண்ணு வெச்சதும் நீதானா
வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட
காமன் சொன்னானா

ஆண்: தில்லானா தில்லானா
பெண்: நான் தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா

ஆண்: மஞ்சக் காட்டு மைனா
பெண்: உன்ன கொஞ்சி
கொஞ்சிப் போனா
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.