Theera Nadhi Song Lyrics in Tamil

Theera Nadhi Song Lyrics in Tamil from Maara Movie. Theera Nadhi Song Lyrics has penned in Tamil by Thamarai. Theeranathi Song Lyrics.

படத்தின் பெயர்:மாறா
வருடம்:2020
பாடலின் பெயர்:தீராநதி தீராநதி
இசையமைப்பாளர்:ஜிப்ரான்
பாடலாசிரியர்:தாமரை
பாடகர்கள்:பத்மலதா

பாடல் வரிகள்:

குழு: எத்தனை நாள் ஆகுமோ
எண்ணமெல்லாம் தாகமோ
இப்படியே போகுமோ
எந்தன் உயிரே தீருமோ

பெண்: தீராநதி தீராநதி
தேடல்களோ தீராதினி
இறங்கியே வருகுது
என் வாசல் வழி
நனைவதோ நகர்வதோ
வாழ்வின் விதி

பெண்: விலாசம் இல்லாமல்
விவாதம் செய்யாமல்
நான் இங்கு ஏன் நின்றேன்
கூறாய் சகி

பெண்: தீராநதி தீராநதி
தேடல்களோ தீராதினி
இறங்கியே வருகுது
என் வாசல் வழி

குழு: எத்தனை நாள் ஆகுமோ
எண்ணமெல்லாம் தாகமோ
இப்படியே போகுமோ
எந்தன் உயிரே தீருமோ
ஆகுமோ தாகமோ போகுமோ

பெண்: அருகினில் நான் இருந்தேன்
தொலைவினில் நீ இருந்தாய்
இரு கை நீட்டுகிறேன்
எதிரினில் வாராய்

பெண்: யாரும் காணாத
ரகசிய கோலம்
நானும் நீயும்தான்
இணைத்திடும் பாலம்

பெண்: தேடும் மீனாய்
நீரில் நான் இருந்தேன்
தொலைவில் நீ இருந்தாய்

பெண்: தீராநதி தீராநதி
தேடல்களோ தீராதினி
இறங்கியே வருகுது
என் வாசல் வழி
நனைவதோ நகர்வதோ
வாழ்வின் விதி

பெண்: தனிமையின் தூரிகையால்
பனிமலர் நான் வரைந்தேன்
மறைவின் சூரியனால்
கரைந்திடலானேன்

பெண்: யாரோ காணும் ஓர்
கனவினில் நானும்
தீரா காலோடு
நுழைந்ததும் ஏனாம்

பெண்: நாணல் போலே
நீரில் நான் நனைந்து
நதியாய் மாறுகின்றேன்

பெண்: தீராநதி தீராநதி
தேடல்களோ தீராதினி
இறங்கியே வருகுது
என் வாசல் வழி
நனைவதோ நகர்வதோ
வாழ்வின் விதி

பெண்: விலாசம் இல்லாமல்
விவாதம் செய்யாமல்
நான் இங்கு ஏன் நின்றேன்
கூறாய் சகி

குழு: எத்தனை நாள் ஆகுமோ
எண்ணமெல்லாம் தாகமோ
இப்படியே போகுமோ
எந்தன் உயிரே தீருமோ

குழு: எத்தனை நாள் ஆகுமோ
எண்ணமெல்லாம் தாகமோ
இப்படியே போகுமோ
எந்தன் உயிரே தீருமோ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *