Naan Enbathu Yaaro Song Lyrics in Tamil from Jaanu Movie. Naan Enbathu Yaaro Song Lyrics has penned in Tamil by Karthik Netha.
பாடல்: | நான் என்பது யாரோ |
---|---|
படம்: | ஜானு |
வருடம்: | 2020 |
இசை: | கோவிந்த் வசந்தா |
வரிகள்: | கார்த்திக் நேதா |
பாடகர்: | பிரதீப் குமார் |
Naan Enbathu Yaaro Lyrics in Tamil
நான் என்பது யாரோ
பெருந்திரளினிலே ஏடே
நான் என்பதை வீசி
எழுந்தேனே மனமே
தான் என்பது போகும்
பெருங்கணத்தினிலே கூவி
வாவென்றொரு வாழ்க்கை
சிறுகுரலாய் அருளாய் பேச
போகாதொரு ஆழம் தேடி
நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்
வாழாதொரு வாழ்வைத் தீண்டி
தெளி தெளி தெளி தெளி
தெளிவில் பூப்பேன்
காணாதொரு வெளிச்சத்தில் எனை
நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்
வீழாதொரு நிலையினிலே
அடப் பித்தேறிச் சத்தேறிச்
சித்தேறி மிதப்பேன்
ஆழ் என்பது மெய்ஞான போதம்
இப்போதில் இப்போதில்
இப்போதில் எல்லாமும்
போல் என்பது பகட்டு வாதமே
இப்போதில் இப்போதில்
இப்போதில் எல்லாமும்
நாள் என்பதும் பொய்யான காலம்
இப்போதில் இப்போதில்
இப்போதில் எல்லாமும்
கேள் என்குதே தெளிந்த ஞானமே
கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே
ஆறறிவென்றே
அலட்டாமல் எளிதாய் நானும்
ஓர் உயிர் என்றே இருப்பேனே
குழம்பாமல்
யார் உடைத்தாலும்
சிரிக்கின்ற பொம்மைப்போலே
நான் என் இயல்பில் இருப்பேன்
ஓடும் நதியின் மேலே
உட்காரும் தட்டான் போலே
லேசாக அமர்ந்தே பறப்பேனே
புவி மேலே
தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
தான் தூங்கும் மழலைப்போலே
பேரன்பைப் போலி செய்வேனே
நிறுத்தாமல்
பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்
இப்போது இப்போது இப்போது கண்ணாக
பேருண்மையில் கலந்துபோகிறேன்
இப்போது இப்போது இப்போது ஒன்றாக
பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்
இப்போது இப்போது இப்போது நன்றாக
பேராற்றலில் கரைந்துபோகிறேன்
பூத பேத வாத மோகம் மறைகிறதே
நான் எனக்குள்ளே
அசைந்தேனே ஊஞ்சல்போலே
யார் எனை அசைத்தே ரசித்தாரோ
சலிக்காமல்
பேரலை மேலே
விளையாடும் காகம்போலே
யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்
சீறும் புலியைப் பார்த்தே
சிரிக்கின்ற சிசுவைப் போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
பதறாமல்
பூவிழும் குளத்தின் மேலே
உருவாகும் வளையல் போலே
நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
கதறாமல்
வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்
தோதாய் தோதாய் போகிறேன்
தூதாய் தூதாய் ஆகிறேன்
போதாய் போதாய் பூக்கிறேன்
காதாய் காதாய் கேட்கிறேன்
தாலாட்டும் காலம்
தலையாட்டும் ஞானம்
தாய்ப்போல் பாடுதே
ஆரோ ஆராரிரிரோ
ஆரோ…
Jaanu Journey Song Lyrics
Naan Enbathu Yaaro
Perunthiralinile Yaede
Naan Enbathai Veesi
Ezhunthene Manamae
Thaan Enbathu Pogum
Perunganthinile Koovi
Vaavendroru Vazhakkai
Sirukuralai Arulaai Pesa
Pogathoru Aazham Thedi
Neenthi Neenthi Moozhgi Pooven
Vaazhathoru Vazhavai Theendi
Theli Theli Theli Theli Thelivil Pooppen
Kaanathoru Velichathil
Ennai Naane Ada Muluthaai Parppen
Veezhathoru Nilaiyinile
Ada Pitheri Satheri Sitheri Mithappen
Aazh Enabthu Meiyana Pootham
Ippothil Ippothil Ippothil Ellamum
Pol Enbathu Pagattu Vaathame
Ippothil Ippothil Ippothil Ellamum
Naal Enbathu Poiyyana Kaalam
Ippothil Ippothil Ippothil Ellamum
Kel Enguthe Thelintha Nyaname
Ketka Ketka Osai Meeri Ketkirathe
Aararivendre
Alattamal Elithaai Naanum
Oor Uyir Endre Iruppene
Kulambamal
Yaar Udaithalum
Sirikindra Bommai Pole
Nan En Iyalbil Iruppen
Odum Nathiyin Mele
Utkaarum Thattan Pole
Lesaga Amarnthe Parappene
Puvi Melae
Thaai Thungum Azhagai Parthu
Thaan Thungum Mazhalai Pole
Peranbai Poli Seyvene
Niruthaamal
Perellayil Utkarnthu Parthen
Ippothu Ippothu Ippothu Kannaga
Perunmaiyil Kalanthu Pogiren
Ippothu Ippothu Ippothu Ondraga
Peranbile Thalladi Poothen
Ippothu Ippothu Ippothu Nandraga
Peraatralil Karainthu Pogiren
Bootha Petha Vadha Mogam Maraigirathe
Nan Enakkulle
Asainthene Oonjal Pole
Yaar Ennai Asaithae Rasithaaro
Salikkaamal
Peralai Melae
Vilaiyadum Kaakam Polae
Yaar Ennai Thunivaai Padaithar
Seerum Puliyai Paarthe
Sirikindra Sisuvai Polae
Kobangal Maranthe Sirippene
Patharaamal
Poovilum Kulathin Mele
Uruvagum Valaiyal Pole
Naan Vazhntha Athirvai Koduppene
Katharaamal
Vaagai Vaagai Vazhkiren
Paagai Paagai Aagiren
Thothaai Thothaai Pogiren
Thoothaai Thoothaai Aagiren
Pothaai Pothaai Pookkiren
Kaathai Kaathai Ketkkiren
Thaalattum Kaalam
Thalaiyattum Njaanam
Thaai Pol Paaduthe
Aaro Aaraaririro
Aaro…