Senthoora Song Lyrics in Tamil from Bogan Movie. Senthoora Song Lyrics has penned in Tamil by Thamarai and Music by D.Imman.
படத்தின் பெயர்: | போகன் |
---|---|
வருடம்: | 2016 |
பாடலின் பெயர்: | செந்தூரா |
இசையமைப்பாளர்: | D இமான் |
பாடலாசிரியர்: | தாமரை |
பாடகர்கள்: | லுக்ஷிமி சிவனேஸ்வரலிங்கம் |
பாடல் வரிகள்
நிதா நிதா நிதானமாக
யோசித்தாலும்
நில்லா நில்லா நில்லாமல்
ஓடி யோசித்தாலும்
நீ தான் மனம் தேடும்
மான்பாலன்
பூவாய் எனையேந்தும்
பூபாலன்
என் மடியின் மணவாளன்
என தோன்றுதே
செந்தூரா ஆ
சோ்ந்தே செல்வோம் செந்தூரா ஆ
செங்காந்தள் பூ உன் தேரா ஆ
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
நடக்கையில் அணைத்தவாறு
போக வேண்டும்
விரல்களை பினைத்தவாறு
பேச வேண்டும்
காலை எழும் போது
நீ வேண்டும்
தூக்கம் வரும் போது
தோள் வேண்டும்
நீ பிாியா வரம் தந்தால்
அதுவே போதும்
செந்தூரா ஆ
சோ்ந்தே செல்வோம் செந்தூரா ஆ
செங்காந்தள் பூ உன் தேரா ஆ
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
செந்தூரா ஆ
மழையின் இரவில்
ஒரு குடையினில் நடப்போமா
மரத்தின் அடியில்
மணிக்கணக்கினில் கதைப்போமா
பாடல் கேட்போமா
பாடி பாா்ப்போமா
மூழ்கத்தான் வேண்டாமா
யாரும் காணாத இன்பம் எல்லாமே
கையில் வந்துவிழுமா
நீயின்றி இனி என்னால்
இருந்திட முடியுமா
செந்தூரா ஆ
சோ்ந்தே செல்வோம் செந்தூரா ஆ
செங்காந்தள் பூ உன் தேரா ஆ
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
செந்தூரா ஆ
அலைந்து நான் களைத்து
போகும்போது அள்ளி
மெலிந்து நான் இளைத்து
போவதாக சொல்லி
வீட்டில் நளபாகம் செய்வாயா
பொய்யாக சில நேரம் வைவாயா
நான் தொலைந்தால்
உனை சேரும் வழி சொல்வாயா
செந்தூரா ஆ
சோ்ந்தே செல்வோம் செந்தூரா ஆ
செங்காந்தள் பூ உன் தேரா ஆ
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
எய்தாயா ஆ
கண்கள் சொக்க செய்தாயா ஆ
கையில் சாய சொல்வாயா ஆ
ஏதோ ஆச்சு வெப்பம் மூச்சில்
வெட்கங்கள் போயே போச்சு