Un Nenjukulle Vazha Song Lyrics in Tamil from Madura Veeran Movie. Un Nenjukulle Vazha Song Lyrics has written in Tamil by Yugabharathi.
படத்தின் பெயர்: | மதுரவீரன் |
---|---|
வருடம்: | 2018 |
பாடலின் பெயர்: | உன் நெஞ்சுக்குள்ளே |
இசையமைப்பாளர்: | சந்தோஷ் தயாநிதி |
பாடலாசிரியர்: | யுகபாகராதி |
பாடகர்கள்: | சின்மயீ |
பாடல் வரிகள்
உன் நெஞ்சுக்குள்ளே
வாழ நான் ஏங்குறேன்
நீ வந்து நின்னா
மூச்சையே வாங்குறேன்
உன் நெஞ்சுக்குள்ளே
வாழ நான் ஏங்குறேன்
நீ வந்து நின்னா
மூச்சையே வாங்குறேன்
ராசாவே உன்னை
கட்டி கொள்ள ஆசையில
ஆளாகி நின்னேன்
கண்ணு முன்னாலே
எனக்கு ஏத்த ஆம்பள
எவனும் இல்ல ஊருல
காதல காட்டு டா
கொஞ்சம் என் மேல
உன் நெஞ்சுக்குள்ளே
வாழ நான் ஏங்குறேன்
நீ வந்து நின்னா
மூச்சையே வாங்குறேன்
உன் மேல புள்ளி வச்சு
சிக்கிக்கிட்டேன் கோலமா
கையால மீன் குழம்பும்
வச்சி தாரேன் போதுமா
உன் பேர சொல்ல சொல்ல
ஆனேனே காரமா
சும்மா நீ என்னை தின்னு
சூடான சாதமா
ஐயா நீ பார்த்தாலே
பாலூத்து ஆகிவிடும்
பார்க்காம போனாலே
தேகம் நோகும்
எப்போதும் உன் வாசம்
என் உடம்ப மூட வரும்
அப்போது என்னோடு
ஏக்கம் தீரும்
உன் நெஞ்சுக்குள்ளே
வாழ நான் ஏங்குறேன்
நீ வந்து நின்னா
மூச்சையே வாங்குறேன்
அஞ்சு ஆறு புள்ள குட்டி
உன்னை ஒத்த ஜாடையா
அஞ்சாம பெத்து எடுக்க
என்னவிட்டா யாருயா
ஜில்லாவே கண்ணு வெக்க
உன் கூட ஜோடியா
பந்தாவா சுத்தி வந்து
வாழ்வேனே ராணியா
அண்ணாந்து நான் பார்த்த
ஆம்பளையும் யாரும் இல்ல
உன்னாலே மல்லாந்து
சாஞ்சேன் கீழ
என்னானு கேட்காம
நீ போனா நியாயம் இல்ல
ஊர் தாண்டி போகாத
கோயில் காளை
உன் நெஞ்சுக்குள்ளே
வாழ நான் ஏங்குறேன்
நீ வந்து நின்னா
மூச்சையே வாங்குறேன்
உன் நெஞ்சுக்குள்ளே
வாழ நான் ஏங்குறேன்
நீ வந்து நின்னா
மூச்சையே வாங்குறேன்
ராசாவே உன்னை
கட்டி கொள்ள ஆசையில
ஆளாகி நின்னேன்
கண்ணு முன்னாலே
எனக்கு ஏத்த ஆம்பள
எவனும் இல்ல ஊருல
காதல காட்டு டா
கொஞ்சம் என் மேல