Avan Paathu Sirikala Song Lyrics in Tamil from Kodiyil Oruvan Movie. Avan Paathu Sirikala Song Lyrics has written in Tamil by Mohan Raja.
படத்தின் பெயர்: | கோடியில் ஒருவன் |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | அவன் பாத்து சிரிக்கல |
இசையமைப்பாளர்: | நிவாஸ் K பிரசன்னா |
பாடலாசிரியர்: | மோகன் ராஜன் |
பாடகர்கள்: | மால்வி சுந்தரேசன் |
பாடல் வரிகள்
அவன் பாத்து சிரிக்கல
நான் பறக்க தொடங்கிட்டேன்
அவன் பேசி சிரிக்கல
நான் உருக தொடங்கிட்டேன்
அவன் ஜாட காட்டல
நான் சரிய தொடங்கிட்டேன்
அவன் கூட நடக்கல
நான் பொலம்ப தொடங்கிட்டேன்
அவன் திரும்பி பாக்கல
நான் விரும்ப தொடங்கிட்டேன்
அவன் மனசு புரியல
நான் மயங்க தொடங்கிட்டேன்
அவன் கண்ணா காட்டல
நான் கரைய தொடங்கிட்டேன்
அவன் கைய புடிக்கதான்
நான் கனவு கண்டுட்டேன்
அவன நான் பார்த்தா
ஒரு குழந்தையா குதிப்பேன்
அவன் என்னை பார்த்தா
ஒரு குமரியா ரசிப்பேன்
அவன நான் பார்த்தா
ஒரு குழந்தையா குதிப்பேன்
அவன் என்னை பார்த்தா
ஒரு குமரியா ரசிப்பேன்
கண்ணுக்குள்ள பேசி சிரிச்சேன்
ஆசையெல்லாம் தேடி குவிச்சேன்
கண்டபடி ஆடி துடிச்சேன்
எல்லாம் உன்னாலே
நெஞ்சுக்குள்ள கட்டி துடிச்சேன்
என் நிழல ஒட்டி ரசிச்சேன்
என்னென்னவோ சொல்ல நெனச்சேன்
சொல்லி சொல்லி என்ன தொலைச்சேன்
கடிகாரம் பார்க்காம
உனக்காக இருக்குறேன்
கன நேரம் பிரிஞ்சாலும்
கணமா நான் உறங்குறேன்
கூடு விட்டு கூடு பாயும்
நாள் தேதி பாக்குறேன்
ஒட்டி நடக்கல கட்டி புடிக்கல
ஆனாலும் நெஞ்சோரம்
ஏங்க தொடங்கிட்டேன்
ஒன்னும் புரியல சொல்ல தெரியல
ஏதேதோ நானும்தான்
எண்ண தொடங்கிட்டேன்
ஒட்டி நடக்கல கட்டி புடிக்கல
ஆனாலும் நெஞ்சோரம்
ஏங்க தொடங்கிட்டேன்
ஒன்னும் புரியல சொல்ல தெரியல
ஏதேதோ நானும்தான்
எண்ண தொடங்கிட்டேன்