Suriavelan’s Album Vilagathey Anbe Song Lyrics in Tamil ft Rakshita Suresh. Vilagathey Song Lyrics has penned in Tamil by Suriavelan.
பாடல் வரிகள்
ஆண்: நீரில்லா நிலமாகி போனேன்
வேரில்லா மரமாகி போனேன்
காற்றில்லா தீயாகி போனேனே
ஆண்: நீரில்லா நிலமாகி போனேன்
வேரில்லா மரமாகி போனேன்
காற்றில்லா தீயாகி போனேனே
ஆண்: மயங்குகிறேன் உன் விழியில்
நீ போதும் என் வழியில்
சேர்ந்துவிடு என் உயிரில்
நீதானே என் விடியல்
ஆண்: விலகாதே அன்பே நீயும்
நீதான் என் நிஜமுமடி
உன்னுடைய நிழலாய் இருந்தும்
தனியாக நிக்குறேன்டி
ஆண்: தலைக்கோதும் உந்தன் மடியில்
நான் சாய வேண்டுமடி
உன்னருகில் வாழ்ந்தால் போதும்
என் சாபம் தீருமடி
ஆண்: என்னை பார்த்து
மறையும் நிலவு
கலையாத நீ என் கனவு
விழிமூடி தூங்கும் முன்னே
வலி சேருதே
பெண்: எனக்காக எரியும் கதிரே
என் வாழ்வில் ஒளி தந்தாயே
நீ இன்றி என் பூமி இருளானதே
ஆண்: மண் சேரும் மழை கூட
வான் சேர வேண்டுமே
ஒரு துளி நாம் சேர
கடல் வேண்டுமே
ஆண்: காதல் பொய்யில்லையே
காலம் நீ இல்லையே
உன்னை தாங்கும் வரை
உண்மை இங்கில்லையே
பெண்: ஒரு குரல் அலைக்குதோ
அது உன்னை கேட்குதோ
ஆண்: ஒரு குரல் அலைக்குதோ
அது நீ என்று என் உயிர் சொல்லுதோ
பெண்: விலகாதே அன்பே நீயும்
நீதான் என் நிஜமுமடா
உன்னுடைய நிழலாய் இருந்தும்
தனியாக நிக்குறேன்டா
பெண்: தலைக்கோதும் உந்தன் மடியில்
நான் சாய வேண்டுமடா
உன்னருகில் வாழ்ந்தால் போதும்
என் சாபம் தீருமடா
ஆண்: நீரில்லா நிலமாகி போனேன்
வேரில்லா மரமாகி போனேன்
காற்றில்லா தீயாகி போனேனே
ஆண்: புரியாத கவிதையில் பிழையா
தவறுக்கு காதல் விலையா
பிழை இல்லா மனிதன் என்றால்
இறைவன் இல்லையா
பெண்: கரைவந்து சேரா அலையா
தேவதையின் இதயம் சிலையா
கல்லை கூட காதல் என்று
கரைப்பதில்லையா
பெண்: பிரளயத்தில் நிலம் கூட
நிலை மாறி போகுமே
நான் அதில் இருந்தாலும்
உன்னை சேருவேன்
ஆண்: கருவுற்ற கணமே நான்
உன் உயிர் தேடினேன்
உயிரே பிரியாதே
பெண்: வா அருகிலே
தாயை போல் தாங்கவா
ஆண்: உன் மடியிலே
மழலை போல் தவிழவா
பெண்: மயங்கிவிட்டேன் உன் விழியில்
நான் வருவேன் உன் வழியில்
கலந்துவிட்டேன் உன் உயிரில்
நீதானே கடலினை மலையினை
தாண்டியும் வருவாயா
ஆண்: விலகாதே அன்பே நீயும்
நீதான் என் நிஜமுமடி
உன்னுடைய நிழலாய் இருந்தும்
தனியாக நிக்குறேன்டி
ஆண்: தலைக்கோதும் உந்தன் மடியில்
நான் சாய வேண்டுமடி
உன்னருகில் வாழ்ந்தால் போதும்
என் சாபம் தீருமடி
ஆண்: விலகாத விட்டு விலகாத
என்னை பிரியாதே அன்பே
விலகாத விட்டு விலகாத
என்னை பிரியாதே அன்பே
ஆண்: விலகாத விட்டு விலகாத
என்னை பிரியாதே அன்பே
விலகாத விட்டு விலகாத
என்னை பிரியாதே அன்பே