Imaithidathe Song Lyrics in Tamil from Yaadhum Oore Yaavarum Kelir Movie. Imaithidathe Song Lyrics penned in Tamil by Mohan Rajan.
பாடல்: | இமைத்திடாதே |
---|---|
படம்: | யாதும் ஊரே யாவரும் கேளிர் |
வருடம்: | 2023 |
இசை: | நிவாஸ் K பிரசன்னா |
வரிகள்: | மோகன் ராஜன் |
பாடகர்: | மால்வி சுந்தரேசன் |
Imaithidathe Lyrics in Tamil
இமைத்திடாதே… உனது விழியில்
நுழைய பார்க்கிறேன்
விலகிடாதே… உனது விரலில்
உயிரை கோர்க்கிறேன்
இமைத்திடாதே… உனது விழியில்
நுழைய பார்க்கிறேன்
விலகிடாதே… உனது விரலில்
உயிரை கோர்க்கிறேன்
இமைத்திடாதே… உனது விழியில்
நுழைய பார்க்கிறேன்
இருக்கிறேன் சிலிர்க்கிறேன்
வியக்கிறேன் ரசிக்கிறேன்
பறக்கிறேன் மிதக்கிறேன்
தவிக்கிறேன் துடிக்கிறேன்
உனது விழியினில் உருவமாய்
இருக்க பிடிக்குதே
உனது விரல்களின் பிடியிலே
நடக்க பிடிக்குதே
உனது கனவுகள் நானென்ன
காண பிடிக்குதே
உனது உலகமே நீயென
கூற பிடிக்குதே
இமைத்திடாதே… உனது விழியில்
நுழைய பார்க்கிறேன்
விலகிடாதே… உனது விரலில்
உயிரை கோர்க்கிறேன்
கண்கள் மூடி நானும்
கண்ணாடி பார்க்கிறேன்
என்ன கோலம் என்று
தள்ளாடி போகிறேன்
உன்னை காணும் போது
என் உள்ளே தோற்கிறேன்
என்ன செய்து போனாய்
நெஞ்சோடு சாய்கிறேன்
காதலா காணலா
என்ன கேட்கிறேன்
என்ன பேர் வைப்பதென்று
உன்னை நெஞ்சில் அச்சடிக்கிறேன்
காதலே நீ எனக்குள் என்னை
இயங்க வைக்கிறாய்
ஊடலே நீ எனக்குள் என்னை
வாங்க வைக்கிறாய்