Senbagame Senbagame Song Lyrics in Tamil from Enga Ooru Pattukaran Movie. Senbagame Senbagame Song Tamil Lyrics written by Gangai Amaran.
படத்தின் பெயர்: | எங்க ஊரு பாட்டுக்காரன் |
---|---|
வருடம்: | 1987 |
பாடலின் பெயர்: | செண்பகமே செண்பகமே |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | கங்கை அமரன் |
பாடகர்கள்: | மனோ |
பாடல் வரிகள்:
பட்டுப் பட்டு பூச்சி போல
எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க
நான் வளர்த்த நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனச
வாசம் வரும் மல்லிகையும்
தொட்டுத் தொட்டு நான் பறிக்க
துடிக்குதந்த செண்பகமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்து காத்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்து காத்து நின்னேனே
உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம்
தேடும் உன்னை பின்னால
எப்போதும் உன்ன தொட்டு
பாடப்போறேன் தன்னால
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
மூணாம்பிறையைப் போல
காணும் நெத்திப் பொட்டோட
நாமும் கலந்திருக்க
வேணும் இந்தப் பாட்டோட
கருத்தது மேகம் தலை முடி தானோ
இழுத்தது என்ன பூவிழி தானோ
எள்ளுக்கும் ராசி பத்திப்
பேசிப் பேசி தீராது
உன்பாட்டுக்காரன் பாட்டு
உன்ன விட்டுப் போகாது
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே