Kadai Kannaaley Song Lyrics in Tamil

Kadai Kannaaley Song Lyrics in Tamil from Bhoomi Movie. Kadai Kannaley Song Tamil Lyrics has written by Thamarai. Kadai Kannale Song Lyrics

படத்தின் பெயர்:பூமி
வருடம்:2020
பாடலின் பெயர்:கடைக்கண்ணாலே ரசித்தேனே
இசையமைப்பாளர்:டி.இமான்
பாடலாசிரியர்:தாமரை
பாடகர்கள்:ஸ்ரேயா கோஷால்

Kadai Kannaaley Lyrics in Tamil

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினால்
பார்த்த நொடி யுகமாய் நீள
பதைபதைத்துக் கண் திறப்பேன்
பின்னும் ஆற்றமையால் அல்லலுற்று
கவண் வீசினால் கடை கண்ணாலே

கடைக்கண்ணாலே ரசித்தேனே
கவின்பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர்பார்த்தேன் இந்நாளா

கடைக்கண்ணாலே ரசித்தேனே
கவின்பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர்பார்த்தேன் இந்நாளா

தரை நில்லா நில்லா இரு காலோடு
கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு
உறங்காமலே தொடரும் உன் ஞாபகம்
உயிர்த் தேடலில் இடறும் உன் பூமுகம்

கண்ணாளனே… கண்ணாளனே…
உன்னிடமே… என் மனமே…
கடைக்கண்ணாலே ரசித்தேனே
கவின்பூவே கண்ணாளா

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினால்

ஒளிந்தேன் மறைந்தேன்
எதைப் பார்த்தும் நான்
உனைச் சேர்ந்த பின்பு
பயம் நீங்கினேன்

படர்ந்தேன் அலைந்தேன்
கொடி போல நான்
மணிமார்பில் சாய்ந்து
மலர் சேர்க்கிறேன்

விழியை இமையை
விரித்தே உனை என்
இளமையின் அரண்மனை
வரவேற்குதே

விரலை நகத்தைக்
கடித்தே எழுதும்
கவிதையை இதழ்களும்
அரங்கேற்றுதே

பெண்: இந்த நொடி போதும் தேனே
சிந்தி உறைந்தேனே நானே
உடலும் உயிரும் மெழுகாய் உருகும்
கண்ணாளனே… கண்ணாளனே…
உன்னிடமே… என் மனமே…

பெண்: கடைக்கண்ணாலே ரசித்தேனே
கவின்பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர்பார்த்தேன் இந்நாளா

பெண்: தரை நில்லா நில்லா இரு காலோடு
கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு
உறங்காமலே தொடரும் உன் ஞாபகம்
உயிர்த் தேடலில் இடறும் உன் பூமுகம்

பெண்: கண்ணாளனே… கண்ணாளனே…
உன்னிடமே… என் மனமே…
கடைக்கண்ணாலே ரசித்தேனே…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *