Santhanam Kungumam Enge Manakkuthu Song Lyrics

Santhanam Kungumam Enge Manakkuthu Song Lyrics from Ayyappan Songs. Santhanam Kungumam Enge Manakkuthu Song Lyrics has sung by T. Sundarrajan.

Santhanam Kungumam Enge Manakkuthu Lyrics

சந்தனம் குங்குமம்
எங்கே மணக்குது
சபரிமலை ஐயப்பனின்
மேலே மணக்குது

குண்டுமல்லி பூ பூத்து
எங்கே மணக்குது
குண்டுமல்லி பூ பூத்து
எங்கே மணக்குது
நம்ம‌ குருசுவாமி
அவர் மேலே மண‌க்குது

சந்தனம் குங்குமம்
எங்கே மணக்குது
சபரிமலை ஐயப்பனின்
மேலே மணக்குது

கன்னிச்சாமி பூ பூத்து
எங்கே மணக்குது
கனகாம்பரம் பூ பூத்து
எங்கே மணக்குது
இங்கே உள்ள‌ கன்னிச்சாமி
மேலே மணக்குது

கனகாம்பரம் பூ பூத்து
எங்கே மணக்குது
இங்கே உள்ள‌ கன்னிச்சாமி
மேலே மணக்குது

சந்தனம் குங்குமம்
எங்கே மணக்குது
சபரிமலை ஐயப்பனின்
மேலே மணக்குது

மருத‌ மரிக்கொழுந்து
எங்கே மணக்குது
மருத‌ மரிகொழுந்து
எங்கே மணக்குது
மாளிகபுரத்து அம்மா
மேலே மண‌க்குது

சந்தனம் குங்குமம்
எங்கே மணக்குது
சபரிமலை ஐயப்பனின்
மேலே மணக்குது

ரோஜாப்பூ பூ பூத்து
எங்கே மணக்குது
ரோஜாப்பூ பூ பூத்து
எங்கே மணக்குது
ராஜாவாம் மணிகண்டன்
மேலே மணக்குது

சந்தனம் குங்குமம்
எங்கே மணக்குது
சபரிமலை ஐயப்பனின்
மேலே மணக்குது

வாடாத‌ மல்லிகை
எங்கே மணக்குது
வாடாத‌ மல்லிகை
எங்கே மணக்குது
வல்லவனாம் வாவர் சுவாமி
மேலே மணக்குது

சந்தனம் குங்குமம்
எங்கே மணக்குது
சபரிமலை ஐயப்பனின்
மேலே மணக்குது

மா பலா கொய்யாவும்
எங்கே மணக்குது
மா பலா கொய்யாவும்
எங்கே மணக்குது
மணிகண்ட‌ சாமி
மேலே மணக்குது

சந்தனம் குங்குமம்
எங்கே மணக்குது
சபரிமலை ஐயப்பனின்
மேலே மணக்குது

தென்னம்பிள்ளை பூ பூத்து
எங்கே மண‌க்குது
தென்னம்பிள்ளை பூ பூத்து
எங்கே மண‌க்குது
பொன்னம்பல‌ வாசன் அவர்
மேலே மணக்குது

சந்தனம் குங்குமம்
எங்கே மணக்குது
சபரிமலை ஐயப்பனின்
மேலே மணக்குது

பாரிஜாதம் பூ பூத்து
எங்கே மண‌க்குது
பாரிஜாதம் பூ பூத்து
எங்கே மண‌க்குது
பாட்டு கேட்கும் பக்தர் கூட்டம்
மேலே மணக்குது

சந்தனம் குங்குமம்
எங்கே மணக்குது
சபரிமலை ஐயப்பனின்
மேலே மணக்குது

பன்னீர் அபிஷேகம்
எங்கே மண‌க்குது
பன்னீர் அபிஷேகம்
எங்கே மண‌க்குது
பதினெட்டு படிகளின்
மேலே மணக்குது

சந்தனம் குங்குமம்
எங்கே மணக்குது
சபரிமலை ஐயப்பனின்
மேலே மணக்குது

அழுதா நதி தீர்த்தம் அது
எங்கே மண‌க்குது
அழுதா நதி தீர்த்தம் அது
எங்கே மண‌க்குது
ஹரிஹர‌ சுதன் ஐயன்
மேலே மணக்குது

சந்தனம் குங்குமம்
எங்கே மணக்குது
சபரிமலை ஐயப்பனின்
மேலே மணக்குது

சந்தனம் குங்குமம்
எங்கே மணக்குது
சந்தனம் குங்குமம்
எங்கே மணக்குது

சபரிமலை ஐயப்பனின்
மேலே மணக்குது
சபரிமலை ஐயப்பனின்
மேலே மணக்குது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *