Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Sannathiyil Kattum Katti Song Lyrics

Sannathiyil Kattum Katti Song Lyrics in Tamil from Ayyappan Songs. Sannathiyil Kattum Katti Song Lyrics has sung in Tamil by Srihari.

Sannathiyil Kattum Katti Lyrics in Tamil

சன்னதியில் கட்டும் கட்டி
வந்தோமப்பா ஐயப்பா
சபரிமலை காடுதேடி
வாரோமப்பா ஐயப்பா

கட்டுமுடி ரெண்டு கட்டி
வந்தோமப்பா ஐயப்பா
காந்தமலை ஜோதிகாண
வாரோமப்பா ஐயப்பா

சபரிமலை பயணந்தானப்பா
சாமி வழித்துணையாவந்து சேரப்பா
சபரிமலை பயணந்தானப்பா
சாமி வழித்துணையாவந்து சேரப்பா

குருசாமி காலைத்தொட்டு
வந்தோமப்பா ஐயப்பா
கூடியொரு சரணமிட்டு
வாரோமப்பா ஐயப்பா

புலியேறும் உன்ன நெனச்சு
வந்தோமப்பா ஐயப்பா
புல்லரிக்க சரணமிட்டு
வாரோமப்பா ஐயப்பா

காந்தமலை ஜோதியானவா
எங்க காவலாக வந்து சேரப்பா
காந்தமலை ஜோதியானவா
எங்க காவலாக வந்து சேரப்பா

சன்னதியில் கட்டும் கட்டி
வந்தோமப்பா ஐயப்பா
சபரிமலை காடுதேடி
வாரோமப்பா ஐயப்பா

கார்த்திகையில் மாலையிட்டு
வந்தோமப்பா ஐயப்பா
கனிவாக விரதம் வெச்சு
வாரோமப்பா ஐயப்பா

மணி மணியா மாலையிட்டு
வந்தோமப்பா ஐயப்பா
மார்கழியில் பூசை வெச்சு
வாரோமப்பா ஐயப்பா

சபரிமலை பயணந்தானப்பா
சாமி வழித்துணையா வந்து சேரப்பா
சபரிமலை பயணந்தானப்பா
சாமி வழித்துணையா வந்து சேரப்பா

குருசாமி சொன்னபடி
வந்தோமப்பா ஐயப்பா
கூடி நல்ல விரதம் வெச்சு
வாரோமப்பா ஐயப்பா

கருப்பசாமி உன்ன நெனச்சு
வந்தோமப்பா ஐயப்பா
கால மால பூச வெச்சு
வாரோமப்பா ஐயப்பா

காந்தமலை ஜோதியானவா
எங்க காவலாக வந்து சேரப்பா
காந்தமலை ஜோதியானவா
எங்க காவலாக வந்து சேரப்பா

சன்னதியில் கட்டும் கட்டி
வந்தோமப்பா ஐயப்பா
சபரிமலை காடுதேடி
வாரோமப்பா ஐயப்பா

கருப்பு பச்ச ஆடை கட்டி
வந்தோமப்பா ஐயப்பா
மனசுக்கொரு லாடங்கட்டி
வாரோமப்பா ஐயப்பா

துளசியில மாலை கட்டி
வந்தோமப்பா ஐயப்பா
சரண கோஷ பாட்டு கட்டி
வாரோமப்பா ஐயப்பா

சபரிமலை பயணந்தானப்பா
சாமி வழித்துணையா வந்து சேரப்பா
சபரிமலை பயணந்தானப்பா
சாமி வழித்துணையா வந்து சேரப்பா

நீல வண்ண ஆடை கட்டி
வந்தோமப்பா ஐயப்பா
நித்தம் உன மனசில் கட்டி
வாரோமப்பா ஐயப்பா

நெய் போட்டு விளக்கேற்றி
வந்தோமப்பா ஐயப்பா
நேரம் ஒரு பாட்டு கட்டி
வாரோமப்பா ஐயப்பா

காந்தமலை ஜோதியானவா
எங்க காவலாக வந்து சேரப்பா
காந்தமலை ஜோதியானவா
எங்க காவலாக வந்து சேரப்பா

சன்னதியில் கட்டும் கட்டி
வந்தோமப்பா ஐயப்பா
சபரிமலை காடுதேடி
வாரோமப்பா ஐயப்பா

உத்தரவு வந்ததுன்னு
வந்தோமப்பா ஐயப்பா
ஊருக்கெல்லாம் ஓலையிட்டு
வாரோமப்பா ஐயப்பா

உச்சி மலை போறதுன்னு
வந்தோமப்பா ஐயப்பா
உறவுக்கெல்லாம் ஓலையிட்டு
வாரோமப்பா ஐயப்பா

சபரிமலை பயணந்தானப்பா
சாமி வழித்துணையா வந்து சேரப்பா
சபரிமலை பயணந்தானப்பா
சாமி வழித்துணையா வந்து சேரப்பா

மூத்ததொரு முடியுங்கட்ட
வந்தோமப்பா ஐயப்பா
முத்திரையில் நெய் பிடிச்சு
வாரோமப்பா ஐயப்பா

முன்னுமொரு கட்டுமிட்டு
வந்தோமப்பா ஐயப்பா
பின்னுமொரு கட்டுமிட்டு
வாரோமப்பா ஐயப்பா

காந்தமலை ஜோதியானவா
எங்க காவலாக வந்து சேரப்பா
காந்தமலை ஜோதியானவா
எங்க காவலாக வந்து சேரப்பா

சன்னதியில் கட்டும் கட்டி
வந்தோமப்பா ஐயப்பா
சபரிமலை காடுதேடி
வாரோமப்பா ஐயப்பா

வீட்டையெல்லாம் தான் மறந்து
வந்தோமப்பா ஐயப்பா
காட்டை மட்டும் மனசில் வச்சு
வாரோமப்பா ஐயப்பா

சொந்தமெல்லாம் தான் மறந்து
வந்தோமப்பா ஐயப்பா
சோதி மட்டும் மனசில் வச்சு
வாரோமப்பா ஐயப்பா

சபரிமலை பயணந்தானப்பா
சாமி வழித்துணையா வந்து சேரப்பா
சபரிமலை பயணந்தானப்பா
சாமி வழித்துணையா வந்து சேரப்பா

வன்புலிபோல் வாகனத்தில்
வந்தோமப்பா ஐயப்பா
வாலையாறு வழி கடந்து
வாரோமப்பா ஐயப்பா

சேரநாடு தான் புகுந்து
வந்தோமப்பா ஐயப்பா
சேருமிடம் தான் நினச்சு
வாரோமப்பா ஐயப்பா

காந்தமலை ஜோதியானவா
எங்க காவலாக வந்து சேரப்பா
காந்தமலை ஜோதியானவா
எங்க காவலாக வந்து சேரப்பா

சன்னதியில் கட்டும் கட்டி
வந்தோமப்பா ஐயப்பா
சபரிமலை காடுதேடி
வாரோமப்பா ஐயப்பா

வழியில் பல ஆலயங்கள்
வந்தோமப்பா ஐயப்பா
வணக்கம் பல சொல்லிக்கிட்டு
வாரோமப்பா ஐயப்பா

பச்சபசேல் தோட்டமெல்லாம்
வந்தோமப்பா ஐயப்பா
உந்தன் முகம் பாத்துக்கிட்டு
வாரோமப்பா ஐயப்பா

சபரிமலை பயணந்தானப்பா
சாமி வழித்துணையா வந்து சேரப்பா
சபரிமலை பயணந்தானப்பா
சாமி வழித்துணையா வந்து சேரப்பா

கோட்டயத்த தான் கடந்து
வந்தோமப்பா ஐயப்பா
கோட்ட வாசல் எருமேலி
வாரோமப்பா ஐயப்பா

எருமேலி சீமையில
வந்தோமப்பா ஐயப்பா
எறங்கி சும்மா பேட்ட துள்ள
வாரோமப்பா ஐயப்பா

காந்தமலை ஜோதியானவா
எங்க காவலாக வந்து சேரப்பா
காந்தமலை ஜோதியானவா
எங்க காவலாக வந்து சேரப்பா

சன்னதியில் கட்டும் கட்டி
வந்தோமப்பா ஐயப்பா
சபரிமலை காடுதேடி
வாரோமப்பா ஐயப்பா

வாபருக்கு சலாம் போட்டு
வந்தோமப்பா ஐயப்பா
வண்ணங்கள பூசிக்கிட்டு
வாரோமப்பா ஐயப்பா

சரக்கோலு ஏந்திக்கிட்டு
வந்தோமப்பா ஐயப்பா
சாயங்கள பூசிக்கிட்டு
வாரோமப்பா ஐயப்பா

சபரிமலை பயணந்தானப்பா
சாமி வழித்துணையா வந்து சேரப்பா
சபரிமலை பயணந்தானப்பா
சாமி வழித்துணையா வந்து சேரப்பா

பச்சிலய கட்டிக்கிட்டு
வந்தோமப்பா ஐயப்பா
மேளத்தாளம் கூட்டிக்கிட்டு
வாரோமப்பா ஐயப்பா

திந்தக்கத்தோம் ஆடிக்கிட்டு
வந்தோமப்பா ஐயப்பா
சாஸ்தா உனை வணங்கிப்புட்டு
வாரோமப்பா ஐயப்பா

காந்தமலை ஜோதியானவா
எங்க காவலாக வந்து சேரப்பா
காந்தமலை ஜோதியானவா
எங்க காவலாக வந்து சேரப்பா

சன்னதியில் கட்டும் கட்டி
வந்தோமப்பா ஐயப்பா
சபரிமலை காடுதேடி
வாரோமப்பா ஐயப்பா

பெருவழி தான் திறந்திருக்க
வந்தோமப்பா ஐயப்பா
குருசாமி முன் நடத்த
வாரோமப்பா ஐயப்பா

நந்தவனம் தான் வணங்கி
வந்தோமப்பா ஐயப்பா
பொடிநடையா தான் நடந்து
வாரோமப்பா ஐயப்பா

சபரிமலை பயணந்தானப்பா
சாமி வழித்துணையா வந்து சேரப்பா
சபரிமலை பயணந்தானப்பா
சாமி வழித்துணையா வந்து சேரப்பா

பேரூரு தோடு மேல
வந்தோமப்பா ஐயப்பா
பொரி போட்டு பூசை பண்ணி
வாரோமப்பா ஐயப்பா

கோட்டப்படி அத நெருங்கி
வந்தோமப்பா ஐயப்பா
எற எடுத்து பூச பண்ணி
வாரோமப்பா ஐயப்பா

காந்தமலை ஜோதியானவா
எங்க காவலாக வந்து சேரப்பா
காந்தமலை ஜோதியானவா
எங்க காவலாக வந்து சேரப்பா

சன்னதியில் கட்டும் கட்டி
வந்தோமப்பா ஐயப்பா
சபரிமலை காடுதேடி
வாரோமப்பா ஐயப்பா

நீலிமலை ஏத்தமேறி
வந்தோமப்பா ஐயப்பா
அப்பாச்சி மேடு தொட்டு
வாரோமப்பா ஐயப்பா

சபரிபீடம் காய் உடைச்சு
வந்தோமப்பா ஐயப்பா
சரங்குத்தி அம்பு விட்டு
வாரோமப்பா ஐயப்பா

சபரிமலை பயணந்தானப்பா
சாமி வழித்துணையா வந்து சேரப்பா
சபரிமலை பயணந்தானப்பா
சாமி வழித்துணையா வந்து சேரப்பா

சன்னதிக்கு ஓட்டமாக
வந்தோமப்பா ஐயப்பா
அம்பலத்தின் வாசலிலே
வாரோமப்பா ஐயப்பா

பக்கமொரு காய் உடைச்சு
வந்தோமப்பா ஐயப்பா
பதினெட்டு படியேறி
வாரோமப்பா ஐயப்பா

காந்தமலை ஜோதியானவா
எங்க காவலாக வந்து சேரப்பா
காந்தமலை ஜோதியானவா
எங்க காவலாக வந்து சேரப்பா

பதினெட்டு படியேறி
வந்தோமப்பா ஐயப்பா
சாஸ்தா உன் முகம் காண
வாரோமப்பா ஐயப்பா

ஐயா உன் நடை வாசல்
திறந்ததப்பா ஐயப்பா
நெய்யாடும் திருமேனி
தெரியுதப்பா ஐயப்பா

ஐயா உன் அழகு முகம்
தெரியுதப்பா ஐயப்பா
ஆனந்தம் கண்ணீரா
பெருகுதப்பா ஐயப்பா

அழகுமுகம் கண்டோம் ஐயப்பா
நாங்க ஆனந்தமே கொண்டோம் ஐயப்பா
அழகுமுகம் கண்டோம் ஐயப்பா
நாங்க ஆனந்தமே கொண்டோம் ஐயப்பா

பொன்னான திருமேனி
சாமி சரணம் ஐயப்பா
கண்ணோடு கலக்குதப்பா
சரணம் சரணம் ஐயப்பா

பார்க்க பார்க்க சலிக்காதே
சாமி சரணம் ஐயப்பா
ஐயா உன் திருக்காட்சி
சரணம் சரணம் ஐயப்பா

சாமி சரணம் சரணம் ஐயப்பா
உந்தன் திருவடியே சரணம் ஐயப்பா
சாமி சரணம் சரணம் ஐயப்பா
உந்தன் திருவடியே சரணம் ஐயப்பா


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.