Oru Mani Adithal Song Lyrics in Tamil from Kalamellam Kadhal Valga Movie. Oru Mani Adithal Song Lyrics penned in Tamil by Pazhani Bharathi.
பாடல்: | ஒரு மணி அடித்தால் |
---|---|
படம்: | காலமெல்லாம் காதல் வாழ்க |
வருடம்: | 1997 |
இசை: | தேவா |
வரிகள்: | பழனி பாரதி |
பாடகர்: | ஹரிஹரண் |
Oru Mani Adithal Lyrics in Tamil
ஒரு மணி அடித்தால்
கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே
வேண்டும் உன் தரிசனம்
போதும் கண்ணே
நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும்
தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்தப் பாடலின்
ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவது
ஏனடியோ
ஒரு மணி அடித்தால்
கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே
வேண்டும் உன் தரிசனம்
வாசம் மட்டும் வீசும் பூவே
வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா
தென்றல் போலே எங்கும் உன்னை
தேடுகிறேன் நான் தேடுகிறேன்
தேடி உன்னை பார்த்து பார்த்து
கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து
சிந்தும் விழி நீரில் நானே
மூழ்குகிறேன் நான் மூழ்குகிறேன்
வீசிடும் புயல் காற்றிலே
நான் ஒற்றைச் சிறகானேன்
காதலின் சுடும் தீயிலே
நான் எறியும் விறகானேன்
மேடைதோறும்
பாடல் தந்த வான்மதியே
ஜீவன் போகும் முன்பு
வந்தால் நிம்மதியே
போதும் கண்ணே
நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும்
தூங்கவில்லை உன் ஞாபகமே
ஓ ஒரு மணி அடித்தால்
கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே
வேண்டும் உன் தரிசனம்
உந்தன் முகம் பார்த்த பின்னே
கண் இழந்து போவதென்றால்
கண் இரண்டும் நான் இழப்பேன்
இப்போதே நான் இப்போதே
உந்தன் முகம் பார்க்கும் முன்னே
நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்பொழுதும்
மூடாதே இமை மூடாதே
காதலே என் காதலே
என்னை காணிக்கை தந்துவிட்டேன்
சோதனை இனி தேவையா
சுடும் மூச்சினில் வெந்துவிட்டேன்
காதல் என்னும்
சாபம் தந்த தேவதையே
காணலாமோ
ராகம் இன்று போவதையே
போதும் கண்ணே
நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும்
தூங்கவில்லை உன் ஞாபகமே
ஒரு மணி அடித்தால்
கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே
வேண்டும் உன் தரிசனம்