Ninaithu Ninaithu Parthal Female Song Lyrics

Ninaithu Ninaithu Parthal Song Lyrics in Tamil from 7G Rainbow Colony. Ninaithu Ninaithu Parthal Song Lyrics has penned by Na.Muthukumar.

படத்தின் பெயர்:7 ஜி ரெயின்போ காலணி
வருடம்:2004
பாடலின் பெயர்:நினைத்து நினைத்து பார்த்தால்
இசையமைப்பாளர்:யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்:நா.முத்துக்குமார்
பாடகர்கள்:ஸ்ரேயா கோஷல்

Ninaithu Ninaithu Parthal Lyrics in Tamil

நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
ஓ உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் உனக்கு கண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
ஓ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமா

தூது பேசும் கொலுசின் ஒளியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமா

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு

பேசி போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா

பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழிகள் என்னை மறக்குமா

தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்
வந்து வந்து போகும்
திருட்டு போன தடயம் இருந்தும்
திரும்பி வருவேன் நானும்
ஒரு தருணம் என்னடா காதலா
உன்னுள் வாழ்கிறேன்

நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
ஓ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *