Zee Tamil Serial Sembaruthi’s Nenjodu Kalanthavale Song Lyrics in Tamil. Nenjodu Kalanthavale Song Lyrics in Tamil from Sembaruthi Serial.
Nenjodu Kalanthavale Lyrics in Tamil
பெண்: உன் பெயரில்
என் பெயர் சேரும் நாள் இதுதான்
துக்கம் இன்றி நாள்தோறும்
கரைகின்றேன் என் உயிரே
ஆண்: ஏ பெண்ணே உன்னை பார்த்த
நாள் முதலாய் தூங்கவில்லை
நான் இதுபோல இருந்ததில்லை
என் உயிரே
பெண்: உன் பெயரில்
என் பெயர் சேரும் நாள் இதுதான்
துக்கம் இன்றி நாள்தோறும்
கரைகின்றேன் என் உயிரே
பெண்: உன்னை பார்த்தாலே அதுபோதும்
நீ சிரிச்சாலே அதுபோதும்
பசிக்காதே ஒருபோதும்
என் உயிரே…
பெண்: உன் பேர சொன்னாலே அதுபோதும்
அதை கேட்டாலே அதுபோதும்
நொடிகூட வாழ்ந்தாலும்
இந்த ஜென்மம் போதுமே
ஆண்: உனக்காக காத்திருக்கும்
நிமிடங்கள் ஓர் சுகமே
உயிருக்குள் உனை தினமும்
சுமந்திருப்பேன் ஒரு தாய் போலவே
ஆண்: உன் இமையோடு நான் இருப்பேன்
கண் இமைக்காமல் நான் .ரசிப்பேன்
உன்னோடு கலந்திருப்பேன்
உன் உயிரே
ஆண்: காற்றாக நான் இருப்பேன்
மூச்சோடு கலந்திருப்பேன்
உன் கண்ணீரை நான் துடைப்பேன்
என் அன்பே
ஆண்: நெஞ்சோடு கலந்தவேளே
என் உயிரோடு உறைந்தவளே
எனக்காக பொறந்தவளே
என் அன்பே
ஆண்: உனக்காக நான் இருப்பேன்
உன் நிழலாக நான் வசிப்பேன்
எப்போதும் துணை இருப்பேன்
என் உயிரே
குழு: மங்களம் பொங்கிட
நெஞ்சங்கள் சேர்ந்திட
நினைக்க நினைக்க
மனம் ஜொலிக்க ஜொலிக்க
குழு: இங்கு மங்கள வாத்தியம்
ஒலிக்க ஒலிக்க
எங்கள் சொந்தங்கள் சேர்ந்ததே