Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Nammai Pola Nenjam Konda Song Lyrics

Nammai Pola Nenjam Konda Song Lyrics in Tamil from Dharmathin Thalaivan Movie. Nammai Pola Nenjam Konda Song Lyrics penned in Tamil by Vaali.

படத்தின் பெயர்:தர்மத்தின் தலைவன்
வருடம்:1988
பாடலின் பெயர்:தென்மதுரை வைகை நதி
இசையமைப்பாளர்:இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:SP பாலசுப்ரமணியம், P சுஷீலா,
மலேசியா வாசுதேவன்

பாடல் வரிகள்:

ஆண்1: தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு

ஆண்1: தேய்கின்றது
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்

ஆண்1: தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி

ஆண்2: நம்மை போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை என்னும்
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை

ஆண்2: தம்பி உந்தன் உள்ளம் தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை

ஆண்2: கண்ணோடு தான் உன் வண்ணம்
நெஞ்சோடு தான் உன் எண்ணம்
முன்னேறு நீ மென்மேலும்
என் ஆசைகள் கை கூடும்
இந்த நேசம் பாசம் நாலும் வாழ்க

ஆண்1: தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி

ஆண்2: நெஞ்சில் என்னை நாளும் வைத்து
கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும்
கண்ணில் காணும் காலம் உண்டு

ஆண்2: பூவைச் சூடி பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே நானே

ஆண்2: உன்னோடு தான் என் ஜீவன்
ஒன்றாக்கினான் நம் தேவன்
நீ தானம்மா என் தாரம்
மாறாதம்மா என் நாளும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

ஆண்1: தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு

பெண்: தேய்கின்றது பொன் மாலை நிலா
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
ஆண்1: இது வானம் போலே வாழும் பாசம்

இருவரும்: தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.