Minnalum Minnalum Song Lyrics in Tamil from Kanda Naal Mudhal. Merke Merke or Minnalum Minnalum Song Lyrics penned in Tamil by Thamarai.
படத்தின் பெயர்: | கண்ட நாள் முதல் |
---|---|
வருடம்: | 2005 |
பாடலின் பெயர்: | மேற்கே மேற்கே |
இசையமைப்பாளர்: | யுவன் சங்கர் ராஜா |
பாடலாசிரியர்: | தாமரை |
பாடகர்கள்: | சங்கர் மகாதேவன், சாதனா சர்கம் |
பாடல் வரிகள்:
ஆண்: லை லை லை லை லாய் லாய் லாய்
லாயே லாயே லாய் லாய் லாய்
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
பெண்: சுடும் வெயில் கோடைக்காலம்
கடும் பனி வாடைக்காலம்
இரண்டுக்கும் நடுவே
ஏதும் காலம் உள்ளதா?
பெண்: இலையுதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழைக்காலம் என்றே
நெஞ்சம் சொல்லுதே
ஆண்: ஓ மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ
பின்னலாய்ப் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திடத் தானோ
ஆண்: லை லை லை லை லாய் லாய் லாய்
லாயே லாயே லாய் லாய் லாய்
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
ஆண்: ஓ கோபம் கொள்ளும் நேரம்
வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
ஆண்: ஓ கோபம் தீரும் நேரம்
மேகம் இல்லா வானம்
பெளர்ணமியாய்த் தோன்றும் அதே நிலா
பெண்: இனி எதிரிகள் என்றே எவருமில்லை
பூக்களை விரும்பா வேர்களில்லை
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே
பெண்: இது நீரின் தோளில் கைபோடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவையில்லையே
ஆண்: மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
லை லை லை லை லாய் லாய் லாய்
லாயே லாயே லாய் லாய் லாய்
ஆண்: வாசல் கதவை யாரோ
தட்டும் ஓசை கேட்டால்
நீதான் என்று பார்த்தேனடி சகி
ஆண்: பெண்கள் கூட்டம் வந்தால்
எங்கே நீயும் என்றே
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி
பெண்: இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகைத் தீண்டும் வேகமோ
பெண்: அட தேவைகள் இல்லை என்றாலும்
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ
ஆண்: மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
லை லை லை லை லாய் லாய் லாய்
லாயே லாயே லாய் லாய் லாய்
ஆண்: ஓ மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ
பின்னலாய்ப் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திடத் தானோ