Mannavan Perai Solli Song Lyrics in Tamil from Mouna Ragam Movie. Mannavan Perai Solli Song Lyrics has penned in Tamil by Vaali.
படத்தின் பெயர்: | மௌன ராகம் |
---|---|
வருடம்: | 1986 |
பாடலின் பெயர்: | மன்னவன் பேரைச் சொல்லி |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | S ஜானகி |
பாடல் வரிகள்:
சின்னச் சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
சின்னச் சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
மன்னவன் பேரைச் சொல்லி
மல்லிகை சூடிக் கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்று
நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன்
சொல்லத் தான் எண்ணியும்
இல்லையே பாஷைகள்
என்னவோ ஆசைகள்
எண்ணத்தின் ஓசைகள்
மாலை சூடி மஞ்சம் தேடி
மாலை சூடி மஞ்சம் தேடி
காதல் தேவன் சன்னிதி
காண காணக் காண காண
சின்னச் சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
சின்னச் சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
மேனிக்குள் காற்று வந்து
மெல்லத் தான் ஆடக் கண்டேன்
மங்கைக்குள் காதல் வெள்ளம்
கங்கை போல் ஓடக் கண்டேன்
இன்பத்தின் எல்லையோ
இல்லையே இல்லையே
அந்தியும் வந்ததால்
தொல்லையே தொல்லையே
காலம் தோறும் கேட்க வேண்டும்
காலம் தோறும் கேட்க வேண்டும்
பருவம் என்னும் கீர்த்தனம்
பாட பாடப் பாட பாட
சின்னச் சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
சின்னச் சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
சின்னச் சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா