Kodiyile Malligai Poo Song Lyrics in Tamil

Kodiyile Malligai Poo Song Lyrics in Tamil from Kadalora Kavithaigal Movie. Kodiyile Malligai Poo Song Lyrics penned in Tamil by Vairamuthu.

பாடல்:கொடியிலே மல்லியப்பூ
படம்:கடலோர கவிதைகள்
வருடம்:1986
இசை:இளையராஜா
வரிகள்:வைரமுத்து
பாடகர்:ஜெயச்சந்திரன், S ஜானகி

Kodiyile Malligai Poo Lyrics in Tamil

ஆண்: கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே

ஆண்: பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்

பெண்: கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே

பெண்: மனசு தடுமாறும்
அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்

ஆண்: நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்

பெண்: பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்ப துன்பம் யாரால

ஆண்: பறக்கும் திசையேது
இந்த பறவை அறியாது
உறவோ தெரியாது
அது உனக்கும் புரியாது

பெண்: பாறையிலே பூமொளைச்சு
பார்த்தவங்க யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு
ஆயிசு நூறு

ஆண்: காலம் வரும் வேளையிலே
காத்திருப்பேன் பொன்மயிலே
பெண்: தேதி வரும் உண்மையிலே
சேதி சொல்வேன் கண்ணாலே

பெண்: கொடியிலே மல்லிகைப்பூ
மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே

பெண்: பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்

ஆண்: கொடியிலே மல்லிகைப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே

Manasu Thadumaarum Song Lyrics

Male: Kodiyile Malligai Poo
Manakuthe Maane
Edukava Thodukava
Thudikiren Naane

Male: Parikka Solli Thoonduthe
Pavala Malli Thottam
Nerunga Vidavillaiye
Nenjukulla Koocham

Female: Kodiyile Malligai Poo
Manakuthe Maane
Kodukava Thadukava
Thavikiren Naane

Female: Manasu Thadumarum
Adhu Nenaicha Neram Marum
Mayakam Irundhalum
Oru Thayakam Thadai Podum

Male: Nitham Nitham Un Nenaipu
Nenju Kuzhi Kaayum
Maadu Rendu Paadhai Rendu
Vandi Enge Serum

Female: Pothi Vecha Anbu Illa
Solli Putaa Vambu Illa
Solla Thaane Thembu Illa
Inba Thunbam Yarala

Male: Parakkum Dhisai Yedhu
Indha Paravai Ariyadhu
Uravo Theriyadhu
Adhu Unakkum Puriyadhu

Female: Paaraiyila Poo Valarnthu
Paarthavaga Yaaru
Anbu Konda Nenjathuku
Aayusu Nooru

Male: Kaalam Varum Velaiyile
Kaathirupen Pon Mayile
Female: Theru Varum Unmaiyile
Sedhi Solven Kannale

Female: Kodiyile Malligai Poo
Manakuthe Maane
Kodukava Thadukava
Thavikiren Naane

Female: Parikka Solli Thoonduthe
Pavala Malli Thottam
Nerunga Vidavillaiye
Nenjukulla Koocham

Male: Kodiyile Malligai Poo
Manakuthe Maane
Edukava Thodukava
Thudikiren Naane

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *