En Rant Ah Konjam Kelu Song Lyrics in Tamil

Vaisagh Album’s En Rant Ah Konjam Kelu Song Lyrics in Tamil. En Rant Ah Konjam Kelu Song Lyrics has penned in Tamil by Vignesh Srikanth.

En Rant Ah Konjam Kelu Lyrics in Tamil

மனநிலை மல்லாக்க
கெடக்குது நண்பா
என் தினநிலை தள்ளாடி
தவிக்குது நண்பா

இல்லாத சோகம்
எல்லாம் கூடி வந்து
காது மேல ஏறி
செய்யும் போது

பொல்லாத காதல் காஜ்ஜி
கேரியர் கடமை
எதுவும் இங்கு
ஏற்றம் கண்டிடாது

நான் பொலம்ப வந்து நிக்குறேன்
என் ரண்ட்-அ கொஞ்சம் கேளு
மனம் குழம்பி வந்து நிக்குறேன்
என் ரண்ட்-அ கொஞ்சம் கேளு

நெஞ்சு நெறம்பி வந்து நிக்குறேன்
என் சோக கதைய கேளு
விழி தளும்பி வந்து நிக்குறேன்
என் ரண்ட்-அ கொஞ்சம் கேளு

சின்ன சோகம் பெரிய சோகம்
எதுவும் இங்க இல்ல
ப்ளெஸ்ஸிங் எல்லாம் என்ன சொன்ன
என்னத்த நான் சொல்ல

மனசு முழுக்க இருக்கும் வலிக்கு
மாத்திரையே இல்ல
தேடி பாத்து தெரபி போக
தெம்பும் இங்க இல்ல

பாட்டும் சளிச்சது
படங்களும் சளிச்சது
பார்ன்-ம் சளிச்சது
பானமும் சளிச்சது

நேத்தும் சளிச்சது
நிலவும் சளிச்சது
காத்தும் சளிச்சது
காதலும் சளிச்சது

என் கவலை மறைய
கவிதை சொன்னேன்
பாட்ட கேளு நண்பா
கண்ணீர் கதைய
கலந்து சொன்னேன்
கன்சர்ன் காட்டு நண்பா

என் செதறி கெடக்கும்
செல்ப் லவ் எல்லாம்
சிரிக்குதடா நண்பா
என் மழுங்கி போன
மெண்டல் ஹெல்த்தில்
மழைய ஊத்து நண்பா

ஒரு நாள் அழுதா
சோகம் தீருமா
உன்னைப்போல மனுசனுக்கு
ஓவர் ஷேரிங் ஆகுமா

ட்ராஜெடி இல்லா
ஆர்ட்-டு இங்க ஏதுமா
ஹார்ட் பிரேக்கில் வளர்ந்திடாத
ஜோர்டன் இங்க யாருமா

ட்ரிகர் ஆகாம
நீ பாத்துக்கோ
ஷேப் ஸ்பேஸ் ஒன்ன
நீ சேர்த்துக்கோ
ஒன்டே அட் டைம்-னு
உன்ன நீயே தேத்திக்கோ

அந்த நியாபகத்தை பொதச்சுக்கோ
நாளும் பொழுதும் சிரிச்சுக்கோ
இத்தனையும் தாண்டி வந்தா
இன்னும் என்ன தொடச்சுக்கோ

அழுதா ஆறாதது
எதுவும் இல்ல நண்பா
அத்தனைக்கும் பிறகு ஒரு
பூ பூக்கும் நண்பா

செல்ப் ஹார்ம் செய்வதெல்லாம்
சிற்றின்பமா நண்பா
சர்வைவ் செஞ்சு காட்டு
ஷட்டில்-ஆ நீ நண்பா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *