Keladi Kanmani Song Lyrics in Tamil from Puthu Puthu Arthangal Movie. Keladi Kanmani Song Lyrics has penned in Tamil by Vaali.
பாடல்: | கேளடி கண்மணி |
---|---|
படம்: | புதுப்புது அர்த்தங்கள் |
வருடம்: | 1989 |
இசை: | இளையராஜா |
வரிகள்: | வாலி |
பாடகர்: | S.P பாலசுப்ரமணியம் |
Keladi Kanmani Lyrics in Tamil
கேளடி கண்மணி
பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால்
நெஞ்சில் ஓர் நிம்மதி
ஆஹா நாள்முழுதும்
பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை
உனக்கென நான் கூற
கேளடி கண்மணி
பாடகன் சங்கதி
எந்நாளும் தானே
தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும்
திரைப் பாடல் தான்
இந்நாளில் தானே
நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும்
முதல் பாடல் தான்
கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை
மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக
மடல் பூத்த முல்லை
கேளடி கண்மணி
பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால்
நெஞ்சில் ஓர் நிம்மதி
நீங்காத பாரம்
என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி
நீயல்லவா
நான் வாடும் நேரம்
உன் மார்போடு தான்
நீ என்னைத் தாலாட்டும்
தாய் அல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
கால்போன பாதைகள்
நான் போன போது
கை சேர்த்து நீதானே
மெய் சேர்த்த மாது
கேளடி கண்மணி
பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால்
நெஞ்சில் ஓர் நிம்மதி
ஆஹா நாள்முழுதும்
பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை
உனக்கென நான் கூற
கேளடி கண்மணி
பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால்
நெஞ்சில் ஓர் நிம்மதி