Kathodu Kathaga Song Lyrics has penned in Tamil by Kabilan. Kathodu Kathaga Song Lyrics in Tamil from GV Prakash’s Jail Movie.
படத்தின் பெயர்: | ஜெயில் |
---|---|
வருடம்: | 2020 |
பாடலின் பெயர்: | காத்தோடு காத்தானேன் |
இசையமைப்பாளர்: | ஜி.வி.பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர்: | கபிலன் |
பாடகர்கள்: | தனுஷ், அதிதி ராவ் ஹைதாரி |
Kathodu Kathaga Lyrics in Tamil
ஆண்: ஓ பெண்ணே ஓ பெண்ணே
நீதானே நீதானே
ஓ பெண்ணே ஓ பெண்ணே
நீதானே நீதானே
ஆண்: காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்
ஆண்: காகிதம் போலே ஒன் மேல
ஓவியம் வரையும் நகமானேன்
மோகத்தில் பெண்ணே உன்னாலே
முத்தங்கள் வாழும் முகமானேன்
ஆண்: இலை மறைவில் மலர்ந்திருந்தோம்
மழை துளியாய் கலந்திருந்தோம்
பெண்: காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்
பெண்: நானனா நானனா
நானனா நானனா
நானனா… நானனா…
நானனா… நானனா…
ஆண்: இலையில் மலரின் கைரேகை
இமைகள் யாவும் மயில் தோகை
பெண்: ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
ஆனந்த வன்மம் மறவேனே
ஆண்: மழலை போலவே மடியில் தவழ்ந்த
மயக்கம் தீரவே இல்லை
பெண்: இரண்டு பேருமே இனிமேல் யாரோ
இறைவன் கைகளில் பிள்ளை
ஆண்: கண்மணி பூ பூக்க
காதல் விதையானோம்
பெண்: காமன் நாட்குறிப்பில்
காதல் கதையானோம்… ஓ…
பெண்: காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்…
ஆண்: பூவின் மீது கூத்தாடும்
போதை வண்டு போலானேன்
பெண்: புல்லின் மீது பூமியைப் போல்
உந்தன் பாரம் நான் கண்டேன்
ஆண்: இதழின் ஆற்றிலே குதிக்கும் போது
கரைகள் என்பதே இல்லை
பெண்: கரைகள் இல்லை பரவாயில்லை
கடலே காதலின் எல்லை
இருவரும்: வேர்வை துளிகளிலே
என்னை நனைத்தாயே
இதயம் நொறுங்கத்தான்
இறுக்கி அணைத்தாயே
ஆண்: காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்
இருவரும்: ஆயிரம் ஆசைகள் தாலாட்ட
உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே
விழிகள் மூடியே நடந்ததெல்லாம்
கண்டேன் ரசித்தேன் சுகமானேன்
இருவரும்: இலை மறைவில் மலர்ந்திருந்தோம்
மழை துளியாய் கலந்திருந்தோம்