Evano Oruvan Vasikiran Song Lyrics

Evano Oruvan Vasikiran Song Lyrics in Tamil from Alaipayuthey Movie. Evano Oruvan Vasikiran Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:அலைபாயுதே
வருடம்:2000
பாடலின் பெயர்:எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இசையமைப்பாளர்:ஏ.ஆா்.ரஹ்மான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்:ஸ்வா்ண லதா

Evano Oruvan Vasikiran Lyrics

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பது எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புாியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சாிபாதி

கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள்மனதில் ஒரு மாறுதலா
உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள்மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலா

எந்தன் சோகம் தீா்வதற்கு
இதுபோல் மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலை போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *