Minnal Oru Kodi Song Lyrics in Tamil from Vip Movie. Minal Oorukodu or Minnal Oru Kodi Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | வி.ஐ.பி |
---|---|
வருடம்: | 1997 |
பாடலின் பெயர்: | மின்னல் ஒரு கோடி |
இசையமைப்பாளர்: | ரஞ்சித் பரோட் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | ஹரிஹரன், கே.எஸ்.சித்ரா |
Minnal Oru Kodi Lyrics in Tamil
ஆண்: மின்னல் ஒரு கோடி
எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
பெண்: ஐ லவ் யூ
ஆண்: உன் வார்த்தை தேன் வார்த்ததே
ஆண்: மின்னல் ஒரு கோடி
எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
ஆண்: மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ
என் காதல் தேவதையே
ஆண்: மின்னல் ஒரு கோடி
எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ…
ஆண்: குளிரும் பனியும்
என்னை சுடுதே சுடுதே
உடலும் உயிரும்
இனி தனியே தனியே
ஆண்: ஓ காமன் நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இன்று சரியோ பிரிவே
தீ ஆகினால் நான் மழையாகிறேன்
நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன்
பெண்: என் ஆயுள் வரை உந்தன்
பாயில் உறவாட வருகிறேன்
ஓ..காதல் வரலாறு எழுத
என் தேகம் தருகிறேன்
என் வார்த்தை உன் வாழ்க்கையே
பெண்: மழையில் நனையும்
பனி மலரை போலே
என் மனதை நனைத்தேன்
உன் நினைவில் நானே ஓஹோ
பெண்: உலகை தழுவும் நள்ளிரவை போலே
என்னுள்ளே பரவும் ஆருயிரும் நீயே
என்னை மீட்டியே நீ இசையாக்கினாய்
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்
பெண்: மின்னல் ஒரு கோடி
எந்தன் உயிர் தேடி வந்ததே
ஆண்: ஓ லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
பெண்: ஆஆ உன் வார்த்தை
தேன் வார்த்ததே
ஆண்: மௌனம் பேசியதே
பெண்: குளிர் தென்றல் வீசியதே
ஆண்: ஏழை தேடிய ராணி நீ
என் காதல் தேவதையே
பெண்: ஐ லவ் யூ