Bharatha Deviyin Manikodi Song Lyrics

Bharatha Deviyin Manikodi Song Lyrics in Tamil from Bharathiyar Songs. Bharatha Deviyin Manikodi Song Lyrics has penned by Bharathiyar.

Bharatha Deviyin Manikodi Lyrics

பாரத தேவியின் மணிக்கொடி பாரீர்
பக்தியுடன் அதை வணங்குவோம் வாரீர்
பாரத தேவியின் மணிக்கொடி பாரீர்
பக்தியுடன் அதை வணங்குவோம் வாரீர்

வீரர்கள் உடல் பொருள் ஆவியும் கொடுத்து
சீரமாய் அடிசிறை அனைத்தையும் பொறுத்து
சீராய் நம் பாரத தேவிக்கே உழைத்து
திகழ்வதைக் குறித்திடும் ஜெயக்கொடி பாரீர்

பாரத தேவியின் மணிக்கொடி பாரீர்
பக்தியுடன் அதை வணங்குவோம் வாரீர்
பாரத தேவியின் மணிக்கொடி பாரீர்
பக்தியுடன் அதை வணங்குவோம் வாரீர்

பலவள முளதென குறித்திடும் பச்சை
பரிசுத்த தியாகத்தை காட்டிடும் வெண்மை
நலமுடன் பக்தியை ஊட்டிடும் காவி
நடுநிலை பண்பினை விளக்கிடும் சக்கரம்

பாரத தேவியின் மணிக்கொடி பாரீர்
பக்தியுடன் அதை வணங்குவோம் வாரீர்
பாரத தேவியின் மணிக்கொடி பாரீர்
பக்தியுடன் அதை வணங்குவோம் வாரீர்

உள்ளத்தில் பசுமையும் தூய்மையும் வேண்டும்
உருகி இறைவனை வணங்கிட வேண்டும்
உள்ளவர் இல்லவர் எனும்நிலை நீங்கி
ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும்

பாரத தேவியின் மணிக்கொடி பாரீர்
பக்தியுடன் அதை வணங்குவோம் வாரீர்
பாரத தேவியின் மணிக்கொடி பாரீர்
பக்தியுடன் அதை வணங்குவோம் வாரீர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *