Enthan Vaanamum Neethan Song Lyrics

Enthan Vaanamum Neethan Song Lyrics in Tamil from Valthukal Movie. Enthan Vaanamum Neethan Song Lyrics has penned in Tamil by Na.Muthukumar.

படத்தின் பெயர்:வாழ்த்துக்கள்
வருடம்:2008
பாடலின் பெயர்:எந்தன் வானமும் நீதான்
இசையமைப்பாளர்:யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்:நா.முத்துக்குமார்
பாடகர்கள்:ஹரிசரண், மஹதி

Enthan Vaanamum Neethan Lyrics

ஆண்: எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே

ஆண்: எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும்
வழியில் வருகிறேனே

ஆண்: உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி…

ஆண்: எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே

ஆண்: நீ நடக்கும் போது உன் நிழலும்
மண்ணில் விழும்முன்னே ஏந்திக்கொள்வேன்
பெண்: உன் காதலின் ஆழம் கண்டு
கண்கள் கலங்குதே…

ஆண்: உன்னுடய கால்தடத்தை மழை அழித்தால்
குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன்
பெண்: உன்னால் இன்று பெண்ணானதின்
அர்த்தம் புரிந்ததே…

ஆண்: உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி…

பெண்: எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே

பெண்: எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும்
வழியில் வருகிறேனே

ஆண்: ஒரே ஒரு வார்த்தயில் கவிதை என்றால்
உதடுகள் உன்பெயரை உச்சரிக்கும்
பெண்: என் பெயரைதான் யாரும் கேட்டால்
உன்பெயர் சொல்கிறேன்

ஆண்: ஒரே ஒரு உடலில் இருஇதயம்
காதல் என்னும் உலகத்தில்தான் இருக்கும்
பெண்: நீயில்லையேல் நான் இல்லையே
நெஞ்சம் சொல்லுதே

ஆண்: உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி…

ஆண்: எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே

ஆண்: எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும்
வழியில் வருகிறேனே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *